மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் பெருங்குடல்

Loading...

மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் பெருங்குடல்மனித உடலில் இயங்க கூடிய உள்உறுப்புகளில் ஒன்றான பெருங்குடல் பற்றி பார்ப்போம்.
இது மனித உடலில் உள்ள கழிவுகளை அகற்றக் கூடிய உள் உறுப்புகளில் ஒன்றாகும். உடலில் உள்ள கழிவுகளை அகற்றி மனிதனின் மனமும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு இவ்வுறுப்பு மிக முக்கியமானதாக செயல்படுகிறது. பெருங்குடல் உள் உறுப்பானது நுரையீரல் உள் உறுப்புடன் தொடர்புடையது.
வெளிப்புற உணர்வு (நுகர்தல்) உறுப்பான மூக்குடன் பெருங்குடல் தொடர்புடையது. பெருங்குடல் சீராக இயங்கினால் மனிதன் 24 மணி நேரத்திற்கு 2 முறை அல்லது 1 முறையாவது மலம் வெளியேற வேண்டும். 24 மணி நேரத்திற்கு 2 முறை என்றால் ஒருமுறை மலம் கழித்த பின்பு 12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் மலம் கழித்தால் பெருங்குடல் சீராக இயங்குகிறது ஆகும்.
12 மணி நேரத்திற்குள் 2 முறை அல்லது 3, 4 முறை மலம் கழித்தால் மனிதன் உண்ட உணவில் எடுக்கப்பட்ட சாறு என்பது அவனது ரத்தத்தில் சரியாக சேர்க்கப்படாது.
மனிதன் உண்ட உணவு அவனது உடலில்
1. சாறு ஆகவும்,
2. சக்கையாகவும் பிரிக்கப்படும்.
சாறு என்பது ரத்ததில் கலக்கப்படும்.
சக்கை என்பது மலமாக வெளியேறும்.
மலம் சரியாக வெளியேறவில்லை என்றால் முதலில் மனம் பாதிக்கும். இரண்டாவது ரத்தம் அசுத்தம் ஆகும். மூன்றாவது உடல் பாதிக்கும்.
மனிதன் இன்று உண்ட உணவுதான் சாறு மற்றும் சக்கையாக மாறுகிறது.
சாறு என்பது நாளை ரத்தத்தில் கலந்து ரத்தமாக மாறிவிடும். ஐந்தாவது நாள் எலும்புக்கு கொண்டு செல்லப்படும். ஆறாவது நாள் மூளை, நரம்புகளுக்கு கொண்டு செல்லும்.
இந்த சாறு ஏழாவது நாள்தான் ஆண்களுக்கு விந்தாகவும், பெண்களுக்கு விந்து நாதன் ஆகவும் கொண்டு செல்லப்படுகிறது. பிரிக்கப்பட்ட சக்கை வெளியேறாமல் உள்ளே இருந்தால் ரத்தம் அசுத்தம் ஆவதுடன் மற்ற நோய்களும் உருவாகும் நிலை ஏற்படும்.
மலம் தினந்தோறும் வெளியேற்றுபவர்களின் முகம் அழகாவே இருக்கும்.
இவர்கள் பேசும் பேச்சுக்கூட இனிமையாகவே இருக்கும். மலம் தினந்தோறும் கழிக்காதவர்கள் 2 நாட்களுக்கு 1 முறை 3 நாட்களுக்கு 1 முறை சில சமயம் 7 நாட்களுக்கும் 1 முறை என மலம் கழிப்பவர்களை பார்க்கும் போது அவர்களது முகம் பொலிவு அற்றதாகவும், முகத்தில் பரு, கட்டி போன்றவைகள் தோன்றும் அவர்களது முகம் அழகு அற்றதாகவும் இருக்கும். அவர்கள் எப்பொழுதும் முகம் வாடிய நிலையில் காணப்படுவார்கள்.
மலம் சரியாக கழிக்காதவர்கள் மனம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே மலம் சரியாக கழித்தால் மனம் சரியாக இருக்கும்.
மலம் சரியாக கழிப்பவர்கள் எந்த விரதத்தை வேண்டுமானாலும் கடை பிடிக்கலாம். மலம் சரியாக கழிக்காதவர்கள் ஒரே ஒரு விரதம் மட்டும் தான் இருக்க வேண்டும்.
மலம் தினந்தோறும் வெளியேறாதவர்கள் காலையில் இயற்கை மூலிகை சாறும், இரவில் உள்ளுக்கு பயன்படுத்தும் வர்ம ஆயிலும், குடித்து வந்தால் சரியாகி விடும் ஒரே ஒரு வர்ம புள்ளியை தூண்டினாலும் (அ) ஒரே ஒரு அக்குபஞ்சர் புள்ளியை தூண்டினாலும், பஞ்ச பட்சி சாஸ்திர அடிப்படையில் எந்த பட்சி பாதிக்கப்பட்டதோ அந்த பட்சியின் வர்மப்புள்ளியை தூண்டினாலும் மனித உடலில் உள்ள் 108 வர்ம புள்ளிகளில் ஒரு புள்ளியை தூண்டினாலும் மலம் இலகுவாக வெளியேறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply