மட்டன் தம் பக்த் ரெசிபி

Loading...

மட்டன் தம் பக்த் ரெசிபி
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1 கிலோ வெங்காயம் – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை ஏலக்காய் – 2-3 மிளகு – 1 டீஸ்பூன் கிராம்பு – 4 சீரகம் – 1 டீஸ்பூன் கருப்பு ஏலக்காய் – 1 தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 4 புதினா – 1/2 கப் (நறுக்கியது) கொத்தமல்லி – ஃ/1 கப் (நறுக்கியது) கோதுமை மாவு – 1 கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு தண்ணீர் – 1 1/2 கப்
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், மிளகு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பேஸ்ட்டை, கழுவி வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து , தயிர் ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 2 மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஊற வைத்துள்ள மட்டனைப் போட்டு, உப்பு தூவி கிளறி, 7-8 நிமிடம் வதக்கி விட வேண்டும். மட்டனும், எண்ணெயும் தனியாக பிரியும் போது, தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பிறகு கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி பதத்தில் பிசைந்து, வாணலியை மூடுமாறான வட்டத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூடி வைத்துள்ள வாணலியை திறந்து, அதனை கோதுமை மாவால் மூடி, தீயை குறைவில் வைத்து, 30 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூப்பரான மட்டன் தம் பக்த் ரெசிபி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply