பொடுகைப் போக்கும் ஹென்னா ஹேர் பேக்குகள்

Loading...

பொடுகைப் போக்கும் ஹென்னா ஹேர் பேக்குகள்பொடுகு தலையில் வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல் அதிகமாகி முடியே வலுவிழந்து காணப்படும். பொடுகைப் போக்க வீட்டிலேயே நிறைய பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹென்னா என்னும் மருதாணிப் பொடி. இந்த ஹென்னாவை தலைக்கு பயன்படுத்தினால், பொடுகு பிரச்சனை நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு அந்த ஹென்னாவைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் பேக் போடலாம் என்று பார்க்கலாம்.
• 4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, பின் அதனை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும்.
• இரவில் படுக்கும் போது ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் ஆயில் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகர், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி, 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாய் காலையில் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு அலச வேண்டும். இதனாலும் பொடுகு நீங்கும்.
• ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் ஹென்னா, தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நன்கு அடித்த முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தலை முழுவதும் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
• 250 மிலி கடுகு எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடாகி ஆவி வரும் போது, அதனை இறக்கி, அதில் 2 கையளவு மருதாணி இலை மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்தாலும் பொடுகு மறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply