பேஸ்புக் ரியாக்சன்களை பயன்படுத்த வேண்டாம் பொலிசார் எச்சரிக்கை

Loading...

பேஸ்புக் ரியாக்சன்களை பயன்படுத்த வேண்டாம் பொலிசார் எச்சரிக்கைபேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ’ரியாக்சன்’-களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பேஸ்புக்கில் ’லைக்’ பட்டன் இருப்பது போல் ‘டிஸ்லைக்’ பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பட்டன்களை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், பெல்ஜியம் பொலிசார் அதனை பயன்படுத்த வேண்டாம் என பயனர்களை எச்சரித்துள்ளனர்.இது தொடர்பாக பெல்ஜியம் பொலிசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேஸ்புக் ஏன் வெறும் 6 உணர்வுகளை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏனெனில், பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளை வைத்து நம்மை பற்றி அறிந்து கொள்ளும் பேஸ்புக், நம்மை வகைப்படுத்திக் கொண்டு நமக்கேற்ற விளம்பரங்களை வெளியிட்டு லாபம் ஈட்டுகிறது.

இதன் மூலம் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் அவர்கள் மார்க்கெட்டிங் செய்வது மேலும் எளிதாகுகிறது.

எனவே உங்களுடைய தனியுரிமையை பாதுகாக்க விரும்பினால், அதனை பயன்படுத்துவதை பற்றி சிந்தியுங்கள் என எச்சரித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply