பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Loading...

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள்கர்ப்பிணிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டால் தான் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில ஆரோக்கியமான உணவுப் பொருட்களும் கருவிற்கு தீங்கை விளைவிக்கும்.

எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். இங்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து, அவைகளை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள். சரி, இப்போது கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.


பச்சை பால்
கொண்டு தயாரிக்கப்பட்ட சீஸ் பச்சை பால் கொண்டு தயாரிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கர்ப்பிணிகள் உட்கொள்ளவே கூடாது. ஏனெனில் பச்சை பாலில் இகோலை என்னும் கிருமி இருக்கும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்பருத்தி, தாய் மற்றும் சேய்க்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கும்.


மீன்
மீன்களில் மெர்குரி அதிகம் இருக்கும். இது குழந்தை மற்றும் தாய்க்கு பாதிப்பை உண்டாக்கும். அதிலும் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், சுறா போன்றவற்றை அறவே தொடக்கூடாது.

க்ரில் செய்யப்பட்ட கடல் உணவுகள் பதப்படுத்தப்பட்டு க்ரில் செய்யப்படும் கடல் உணவுகளில் லிஸ்டிரியா என்னும் பாக்டீரியா இருக்கும் வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியா தாய் மற்றும் சேய்க்கு பல்வேறு நோய்கள் வர வழிவகுக்கும்.


அதிகப்படியான காப்ஃபைன்
கர்ப்ப காலத்தில் காபி குடித்தால் சற்று சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் ஆய்வுகளில் காப்ஃபைன் நிறைந்த பானங்களை அதிகம் பருகினால், அதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பலவிதங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆகவே இந்த மாதிரியான பானங்களைத் தவிர்க்க வேண்டும்.


சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீயை அளவுக்கு அதிகமாக கர்ப்பிணிகள் பருகினால், அதனால் குறைப்பிரசவம் மற்றும் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இது உடலில் வெப்பத்தின் அளவை அதிகரிக்கும்.


பச்சை பப்பாளி
பச்சையாக இருக்கும் பப்பாளியை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொண்டால், அதனால் உடலில் வெப்ப அளவு அதிகரித்து, அதனால் கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பப்பாளியை உட்கொள்வதை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.


பாதியாக வேக வைக்கப்பட்ட இறைச்சி
கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்போதும் இறைச்சியைக் கொடுக்கும் முன், அது நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் பாதியாக வேக வைக்கப்பட்ட இறைச்சியில், தாய் சோய்க்கு பல நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் மற்றும் நோய்களுகு வழிவகுக்கும் இகோலை இருக்கும்.


ஈரல்
உண்ணக்கூடிய ஈரல் இறைச்சிப் பொருட்களில் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக உள்ளது. அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.


கற்றாழை
கர்ப்ப காலத்தில் கற்றாழையை சருமத்தில் பயன்படுத்துவது நல்லது. ஆனால் அதை உட்கொண்டால், அதனால் கருச்சிதைவு மற்றும் அசாதாரண இரத்தக்கசிவு ஏற்படத் தூண்டும்.


மூலிகை டீ
கர்ப்பிணிப் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வகையான மூலிகை டீக்களான ஜின்செங், அதிமதுரம் போன்றவை சேர்க்கப்படும் டீக்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது கர்ப்ப கால ஹார்மோன்களைப் பாதித்து, கருச்சிதைவு ஏற்பட வழிவகுக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply