பூண்டு சிக்கன் ரைஸ் ரெசிபி | Tamil Serial Today Org

பூண்டு சிக்கன் ரைஸ் ரெசிபி

ads 1

பூண்டு சிக்கன் ரைஸ் ரெசிபி
தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப் எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது) வெங்காயம் – 1/2 (நறுக்கியது) பூண்டு – 2 (நறுக்கியது) கிராம்பு – 2 சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன் பட்டாணி – 1 கப் உப்பு – தேவையான அளவு எணணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வேண்டுமானால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைத்து, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து, அதில் குடைமிளகாய், உப்பு, வினிகர் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு குக்கரில் உள்ள சிக்கனை, இத்துடன் சேர்த்து நன்கு கிளறி, தட்டு கொண்டு மூடி, 15 நிமிடம் நன்கு வேக விட வேண்டும். 15 நிமிடம் ஆன பின்னர், அதில் சாதத்தைப் போட்டு, நன்கு பிரட்டி விட வேண்டும். தண்ணீரானது நன்கு வற்றிய பின்னர், அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூண்டு சிக்கன் ரைஸ் ரெடி!!!

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11