புற்றுநோய் செல்களை அழிக்கும் மஞ்சள்

Loading...

புற்றுநோய் செல்களை அழிக்கும் மஞ்சள்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின், பயோ கெமிஸ்ட்ரி (உயிர் வேதியியல்) மற்றும் மூலக்கூறு உயிரியல் (மாலிக்யுலர் பயாலஜி) துறைகளின் இணைப் பேராசிரியர் முனைவர் பாஸ்கரன் தலைமையிலான குழு, அமெரிக்காவின் பீட்டர்பர்க் புற்றுநோய் மையத்துடன் இணைந்து, மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’என்ற வேதிப்பொருளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர்.

இதுகுறித்து முனைவர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘குர்குமினின் புற்றுநோய் அழிக்கும் திறன் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பெருங்குடல் புற்றுநோய் அழிப்பில் அதன் பங்கு தெரியாமல் இருந்து வந்தது. நமது உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோயை அழிக்கும் திறன் படைத்தது.

எங்களின் ஆய்வில், டிஎன்ஏவில் பழுது நீக்கும் ஜீன்களில் ஏற்படும் திடீர் மரபணு மாற்றங்களில் உண்டாகும் நான்- பாலிபோசிஸ் பெருங்குடல் புற்றுநோய் செல்களை குர்குமின் வேதிப்பொருள் அழித்துவிடக் கூடிய திறன் படைத்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடலில் உற்பத்தியாகும் முக்கிய புரதத்தின் அளவைத் தூண்டி, அதன் மூலமாக பெருங்குடல் புற்றுநோய் செல்களின் இறப்பை அதிகப்படுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply