புற்றுநோயை தடுக்க உதவும் இயற்கை வழிகள்

Loading...

புற்றுநோயை தடுக்க உதவும் இயற்கை வழிகள்மனிதர்களுக்கு மரணம் ஏற்படக்கூடிய முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. இந்நோயானது உடலில் உள்ள அணுக்கள் பிரிந்து பின் கட்டுப்பாடின்றி வளர்ந்து ஒரு கட்டியை ஏற்படுத்துகிறது. பின் அந்த கட்டியானது கடுமையாக ஒரு இடத்தை அரித்து, உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணங்கள் பலதரப்பட்டதாக இருக்க முடியும். ஆனால் இந்தநோய் பெரும்பாலும் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்வதால் ஏற்படுகிறது. புற்றுநோயை தடுக்க உதவும் பல்வேறு இயற்கை வழிகளை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு கீழே படித்து தெரிந்து கொள்ளவும்.



ப்ராக்கோலி:

புற்றுநோயை திறம்பட தடுக்க உதவும் மிகச்சிறந்த உணவுப் பொருட்களில் ப்ரோக்கோலி ஒன்றாகும். எனினும் ப்ரோக்கோலியை மைக்ரோவேவ் ஒவனில் சமைப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் புற்றுநோயை எதிர்க்ககூடிய ப்ளேவோனாய்டுகள் மைக்ரோவேவினால் அழிக்கப்படுகிறது. ப்ரோக்கோலியை கொதிக்க வைத்தோ அல்லது அப்படியே சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்தது.



பூண்டு:
பூண்டிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் உண்டு. இது நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தி புற்றுநோயை தடுக்க உதவுகிறது. பல்வேறு ஆய்வுகள் பூண்டு சாப்பிட்டால், அதிவேகமாக வயிற்று புற்றுநோய் முரண்பாடுகளை குறைக்கலாம் என்று காட்டுகின்றன.



உடற்பயிற்சி:

உடற்பயிற்சி நோய்எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்து உடலில் இரசாயன, என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது.



தூக்கம்:

மனித உடலின் செயல்பாடுகளை முறையாக கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 8 மணிநேர தூக்கம் அவசியமாகும். முறையான தூக்கம் ஆரோக்கியமான நாளமில்லா சுரப்பி மண்டலத்தை பராமரிப்பதற்கும் மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான நாளமில்லா சுரப்பியை ஊக்குவிக்க முழு இருட்டில் தூங்குவது அவசியம்.



புற்றுநோய் காரணிகள்:

புற்றுநோயை தடுக்க, கண்டிப்பாக புற்றுநோய் ஏற்படுத்தும் அனைத்து விஷயங்களையும் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் தெளிவாக தெரிகிறது. மது, சிகரெட் மற்றும் பிறபொழுது போக்கு போதை மருந்துகள் புற்றுநோய் வருவதற்கான அதி முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.



பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பல ஆய்வு முடிவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை, புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்க முடியும் என்று காட்டியுள்ளன. அனைத்து ஊட்டச்சத்துகள் மற்றும் துணை உணவுகள் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கமானது, புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் முதல் படியாக இருக்கிறது,



ரெட் ஒயின்:

ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடைய ரெட்ஒயின், ரெஸ் வெரடால் மற்றும் பிறபைத்தோ கெமிக்கல்களை கொண்டிருக்கும் திராட்சை பழதோலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு நாள் ஒரு கோப்பை ஒயின் குடிப்பது இரத்த புற்றுநோய், தோல் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற பரவலான புற்று நோய்களை தடுக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.



தொடர்பு சாதனங்கள்:

புற்றுநோய் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் பல்வேறு உள்ளன. மொபைல் தொலைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்க முடியும். புற்றுநோயை தவிர்ப்பதற்கு இக்காரணிகளோடு இடை படுவதை குறைத்துக்கொள்ளவும்.



டார்க் சாக்லெட்:

கொக்கோவில் உள்ள பெண்டாமெர் போன்ற ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளை பெற்றுள்ளன. டார்க் சாக்லேட்டில் கொக்கோ அதிகம் உள்ளது. ஆகவே நிச்சயமாக புற்றுநோயில் இருந்து விலகி இருக்க உதவும் மிக ருசியான வழிகளில் இது ஒன்றாகும்.



ஊட்டச் சத்துக்கள்:

வைட்டமின் டி-யோடு கால்சியத்தையும் சேர்த்து கொள்ளவும். டார் மௌத் மருத்துவபள்ளி ஆய்வின் படி, இந்த ஊட்ட சத்துகள் வளரும் தலை முறையினருக்கு புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரியவந்துள்ளது. இத்தகைய சத்துக்கள் முட்டையில் அதிகம் உள்ளது.



தண்ணீர்:

கழிவறைக்கு செல்வதற்கு முன் ஒவ்வொரு முறையும், ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கவும். 1996 ஆம் ஆண்டில், புதிய இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வின் படி, ஒவ்வொரு நாளும் 8 அவுன்ஸ் கோப்பையில் ஆறு முறை தண்ணீர் குடித்து வரும் ஆண்களுக்கு, நீர்ப்பை பகுதி புற்று நோயின் ஆபத்து பாதியளவு குறைத்துள்ளன என்று கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வானது பெருங்குடல் புற்றுநோயோடு தொடர்புடைய பெண்கள் தண்ணீர் அருந்துவதை பற்றியது. அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பெண்கள், தங்களுக்கான ஆபத்தில் இருந்து 45 சதவீதம் வரை குறைத்து கொண்டுள்ளனர்.

டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும். ஆயிரக்கணக்கான வருடங்களாக க்ரீன் டீ குடிப்பதினால் ஏற்படும் பலன்கள் ஆசியாவில் உணரப்பட்டு வந்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சி முடிவின் படி, க்ரீன் டீ பல புற்று நோய்களை சரி செய்வது மட்டுமல்ல, இதய நோயை கூட கட்டுபடுத்தும் என்று தெரியவந்துள்ளது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN