புருவங்கள் அடர்த்தியாக வளர வழிகள்

Loading...

புருவங்கள் அடர்த்தியாக வளர வழிகள்உங்களுக்கு புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் அனைத்தும் புருவங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, கருமையாகவும் வளர உதவிப் புரியும்.
• விளக்கெண்ணெயை சிறிது சூடேற்றி, அதனைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.
• தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் இரவில் புருவங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டன் கொண்டு துடைக்க வேண்டும். இதனை செய்து வந்தால் அடர்த்தியான புருவத்தை பெறலாம்.
• பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே பாதாம் எண்ணெய் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்தால் புருவங்களின் வளர்ச்சியைக் காணலாம்.
• ஆலிவ் ஆயிலில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ஆலிவ் எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து, இரவில் படுக்கும் போது தினமும் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply