புது தெம்புடன் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களம் இறங்கும் வீடியோகான்

Loading...

புது தெம்புடன் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களம் இறங்கும் வீடியோகான்மின்னனு சாதனங்களை வழங்குவதில் கில்லாடியான வீடியோகான் நிறுவனம் 2 ஆன்ட்ராய்டு போன்களைக் களமிறக்கியது. ஆனால் அதற்குபின் ஸ்மார்ட்போன் சந்தையில் வீடியோகான் காணாமல் போனது.

தற்போது மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புதிய தெம்புடன் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வீடியோகான் விரைவில் களமிறக்குகிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வீடியோகான் எ20 மற்றும் வீடியோகான் எ30 என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த இரண்டு ஆன்ட்ராய்டு போன்களும் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு போன்களுமே டூவல் சிம் வசதியுடன் வருகின்றன. எ20 ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டால் இந்த போனில் 3.5 இன்ச் அளவு கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளே, 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம், 3எம்பி பின்பக்க கேமரா, ஒரு முகப்புக் கேமரா, எப்எம், வைபை போன்ற வசதிகள் உள்ளன. இந்த போன் ரூ.5000 முதல் ரூ.6000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோகான் எ30 போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகிறது. இந்த போனில் 5எம்பி பின்பக்க கேமரா, முகப்பு கேமரா, 4 இன்ச் அளவில் ஒரு டபுள்யுவிஜிஎ ரிசலூசன் கொண்ட டிஸ்ப்ளே, 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர் போன்ற வசதிகளைப் பார்க்க முடியும். இந்த போன் ரூ.9000 முதல் ரூ.10,000 வரை விற்கப்படும் என்று தெரிகிறது.

இந்த இரண்டு போன்களும் மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ் மற்றும் கார்போன் போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று நம்பலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply