புதிய Moto G4 Moto G4 Plus ஸ்மார்ட் போன்களில் அப்படி என்ன இருக்கிறது

Loading...

புதிய Moto G4  Moto G4 Plus ஸ்மார்ட் போன்களில் அப்படி என்ன இருக்கிறதுMotorola நிறுவனம் Moto G4, Moto G4 Plus என்று இரு புதிய ஸ்மார்ட் போன்களை விரைவில் வெளியிடவுள்ளது. இது தொடர்பாக பல தவறான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் புதிய Moto G4, Moto G4 Plus போன்களின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டு போன்களுமே 5.5 இன்ஞ் பெரிய தொடுதிரையை 1920 x 1080 pixels உடன் கொண்டுள்ளதுடன் QualcommSnapdragon octa core 430 processor கொண்டுள்ளது.

இவ்விரு போன்களில் RAM மற்றும் சேமிப்பு அமைப்பில் மாற்றம் காணப்படுகிறது. G4 மொபைல் 2GB RAM, 16 GB சேமிப்பு கொண்டுள்ளது.

அதே வேளை G4 Plus மொபைல் 3GB RAM, 32GB சேமிப்பு கொண்டிருக்கிறது. இரு போன்களிலும் தனியாக 16GB வரை சேமிப்பை நீடித்து கொள்ளும் slot கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், G4 மொபைலில் 5 megapixel முன்பக்க கமெராவும்,13 megapixel பின்பக்க கமெராவும்உள்ளது.

அதேபோல் G4 Plus மொபைலில் 5 megapixel முன்பக்க கமெராவும், 16 megapixel பின்பக்க கமெராவும் இருக்கிறது. தவிர, இதில் finger printsensor இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.

இது தவிர, 3000 mAh பேட்டரி, 4G LTE, 3G, WiFi மற்றும் Bluetooth ஆகியவை கொண்டுள்ள இந்த மொபல்கள் Android 6.01Marshmallow இயங்குதளமுடன் வெளிவருகிறது.

இதுமட்டுமல்லாது இந்த மொபைல் போன்கள் waterproof உடன் இருப்பது கூடுதல் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply