புதிய ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30ல் களமிறக்க இருக்கும் ரிம் நிறுவனம்

Loading...

புதிய ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30ல் களமிறக்க இருக்கும் ரிம் நிறுவனம்ரிம் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30ல் களமிறக்க இருக்கிறது. ப்ளாக்பெரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த தலைமுறைக்கான ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது.

இந்த ப்ளாப்பெரி 10 ஸ்மரார்ட்போன் 2012லேயே களமிறக்க ரிம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ப்ளாக்பெரியின் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்கு தளங்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஸ்மார்ட்போனை காலதாமதாமக களமிறக்குகிறது ரிம்.

மேலும் ப்ளாக்பெரி மெசஞ்சர் மற்றும் இமெயில் சேவைகளை இந்த போனில் இணைக்க கால தாமதம் ஏற்பட்டதாக ரிம் தெரிவித்திருக்கிறது.

அதோடு ரிம்மின் சாப்ட்வேர் அணி இந்த புதிய இயங்கு தளத்தை கடந்த சில வாரங்களாக கடும் சிரத்தையுடன் தயாரித்து வந்ததாக ரிம் அறிவித்திருக்கிறது. இந்த போனைப் பற்றிய மற்ற தகவல் தொழில் நுட்பங்கள் மற்றும் விலை ஆகியவை தெரியவில்லை என்றாலும் இந்த போன் அடுத்த தலைமுறைக்கான எல்லாவிதமான தொழில் நுட்பங்களுடன் வரும் என்று நம்பலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply