புதிய டேப்லெட்டுகளை இந்திய சந்தையில் களமிறக்கிய வின்க்நெட் நிறுவனம்

Loading...

புதிய டேப்லெட்டுகளை இந்திய சந்தையில் களமிறக்கிய வின்க்நெட் நிறுவனம்சமீபத்தில் வின்க்நெட் நிறுவனம் இரண்டு திய டேப்லெட்டுகளை இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டுகளுக்கு அல்டிமேட் டிடபுள்யுஒய்300 மற்றும் ஒன்டர் டிடபுள்யுஒய்100 என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக அல்டிமேட் டேப்லெட்டில் உள்ள 9.7 இன்ச் கப்பாசிட்டிவ் தொடு திரை மிகவும் துல்லியமாகவும் பெரிதாகவும் இருக்கும். அதோடு இந்த டேப்லெட்டில் 1.5 ஜிஹெர்ட்ஸ் எ10 கோர்ட்டக்ஸ் எ8 சிபியு ப்ராசஸர் மற்றும் மாலி-400 ஜிபியு போன்றவை உள்ளதால் இந்த டேப்லெட் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.

இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருவதால் பலரின் கவனங்களையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த டேப்லெட் 11.1 ப்ளைஷை சப்போர்ட் செய்கிறது. இதன் 2எம்பி பின்பக்க கேமரா மற்றும் 0.3 முகப்பு கேமரா போன்றவை சிறந்த போட்டோக்கள் எடுக்கவும், வீடியோ உரையாடல்களை நடத்தவும் ஏதுவாக இருக்கும்.

மேலும் இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் 3ஜி, வைபை, ப்ளூடூத், மினி எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

அடுத்ததாக 7 இன்ச் ஐபிஎஸ் கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கும் ஒன்டர் டேப்லெட் 1.5 ஜிஹெர்ட்ஸ் எ10 கோர்ட்டக்ஸ் எ8 சிபியு ப்ராசஸர் மற்றும் மாலி-400 ஜிபியு போன்றவற்றுடன் வருவதால் இது அபாரமான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.

இந்த டேப்லெட்டும் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் இதன் 0.3எம்பி முகப்பு கேமராவில் அருமையாக வீடியோ உரையாடல் நடத்தலாம். மேலும் இந்த டேப்லெட்டிலும் 3ஜி, ப்ளூடூத், வைபை, யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ போன்ற வசதிகளும் உண்டு.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் 1 பிரீ இந்தி படம், 10 எச்டி வீடியோ பாடல்கள் மற்றும் 20 ஆடியோ பாடல்களுடன் வருகின்றன. அல்டிமேட் டேப்லெட் ரூ.14,999க்கும், ஒன்டர் டேப்லெட் ரூ.7,999க்கும் விற்பனையாகி வருகின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply