புதிய அப்டேட் கொடுக்கும் எல்ஜி மொபைல்

Loading...

புதிய அப்டேட் கொடுக்கும் எல்ஜி மொபைல்கூகுளின் லேட்டஸ்டு வெர்ஷனான ஜெல்லி பீன் இயங்குதளத்திற்கு அப்டேஷனை வழங்குகிறது எல்ஜி நிறுவனம். ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறைய நிறுவனங்கள் அப்டேட் செய்து வருகிறது.

இதற்கிடையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் பெற்ற எல்ஜி நிறுவனமும் ஜெல்லி பீன் அப்டேஷனை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ-2 ஸ்மார்ட்போனிற்கு முதலில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரை வசதியினையும், ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் கொடுப்பதாக இருக்கும். அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெற முடியும்.

இந்த ஆப்டிமஸ் எல்டிஇ-2 ஸ்மார்ட்போனிற்கு மட்டும் அல்லாது, ஆப்டிமஸ் வியூ மற்றும் ஆப்டிமஸ் வியூ II ஆகிய மின்னணு சாதனங்களுக்கும் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஜெல்லி பீன் அப்டேஷன் வசதி கூடிய விரைவில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply