புதிதாக லுமியா 920 டி என்று ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமா நோக்கியா

Loading...

புதிதாக லுமியா 920 டி என்று ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமா நோக்கியாஸ்மார்ட்போன் உலகில் சிறப்பான இடத்தை தக்கவைத்து கொள்ள முயற்சி செய்து வரும் நோக்கியா நிறுவனம் புதிதாக லுமியா-920 டி என்று ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்எம்இன்ஸைடர் வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தி, லுமியா-920 டி என்று ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 இயங்குதளத்துடன் வெளியாக இருப்பதாக தகவலை வழங்குகிறது. இதன்படி இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன புதிய தொழில் நுட்ப வசதியினை கொண்டிருக்கும் என்பது பற்றியும் பார்க்கலாம்.

லுமியா-920 டி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் எஸ்-4 எம்எஸ்எம்-8960-டி என்ற பிராசஸர் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதில் அட்ரினோ 320-ஜிபியூ தொழில் நுட்ப வசதியினையும் பெறலாம். இந்த அட்ரினோ 320 தொழில் நுட்பம் எல்ஜி ஆப்டிமஸ் ஜி, எல்ஜி நெக்சஸ்-4 ஆகிய ஸ்மார்ட்போன்களையும் கொண்டதாக இருக்கும்.

லுமியா-920 டி ஸ்மார்ட்போனும், லுமியா-920 ஸ்மார்ட்போனை போல 4.5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 8.7 மெகா பிக்ஸல் மெயின் கேமரா மற்றும் 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். இதனால் புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் வசதி ஆகியவற்றை சிறப்பாக பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் என்எப்சி தொழில் நுட்ப வசதிக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

இதில் கிடைக்கும் உயர்ந்த தொழில் நுட்பங்களுக்கு 2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி சிறப்பாக சப்போர்ட் செய்யும். ஆனாலும் இந்த லுமியா-920 டி ஸ்மார்ட்போன் பற்றிய அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply