புதிதாக ஒரு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது எம்டிஎஸ் தொலை தொடர்பு சேவை நிறுவனம்

Loading...

புதிதாக ஒரு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம்புதிதாக ஒரு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது எம்டிஎஸ் தொலை தொடர்பு சேவை நிறுவனம். எம்டேக் வரிசையில் புதிதாக எம்டேக்-353 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கும் எம்டிஎஸ் நிறுவனம், இதனுடன் நிறைய நவீன வசதிகளையும் கொடுக்கும்.

இதற்கும் முன்பே எம்டேக்-351, எம்டேக்-352 மற்றும் எம்டேக்-281 ஆகிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கியுள்ளது. எம்டேக்-353 ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரையின் மூலம் எச்விஜிஏ மல்டி தொடுதிரை வசதியினையும் கொடுக்கும். இந்த திரையில் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தில் தகவல்களை தெளிவாக பார்க்கலாம்.

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும். இதில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை. 2ஜிபி மெமகி வசதி கொண்டதோடு, இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை
விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

மேலும் இதில் இன்டர்நெட் வசதிக்காக வைபை மற்றும் தகவல் பரிமாற்றம் செய்ய ப்ளூடூத் வசதியினையும் பயன்படுத்த முடியும். இதில் 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 150 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை பெறலாம். எம்டிஎஸ் எம்டேக்-535 ஸ்மார்ட்போன் ரூ. 5,999 விலை கொண்டதாக இருக்கும். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply