பித்தம் வாய் கசப்பை போக்கும் களாக்காய்

Loading...

பித்தம் வாய் கசப்பை போக்கும் களாக்காய்கேரிசா கேரகாஸ் என்ற தாவரப் பெயரைக் கொண்ட களாக்காய் புளிப்பு சுவை உடையதாக விளங்குகிறது. இதற்கு பிக்கிள் பெரி என்ற ஆங்கில பெயரும் உள்ளது. பள்ளிக்கூட வாசல்களில் விற்கப்படுவதை இயல்பாக பார்க்கலாம். ஊறுகாய் போடுவதற்கும் பயன்படுத்தலாம்.

களாக்காயின் பழம் கனிந்து கருப்பு நிறத்தில் நாவல் பழத்தை போல காட்சியளிக்கிறது. இதன் பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் காணப்பட்டாலும், ஏராளமான தாதுக்களையும், வைட்டமின்களையும் இது உள்ளடக்கியது. ஈரலுக்கு பலம் தரக் கூடியதாக, பசியை தூண்டுவதாக, மலச்சிக்கலை போக்குவதாக இது விளங்குகிறது.பித்தம், வாய் கசப்பு, பசியின்மைக்கான மருந்தை களாக்காயை கொண்டு நாம் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். களாக்காயை நீர்விடாமல் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல். உப்பு, நல்லெண்ணெய்.

வாணலியில் சிறிது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். அஞ்சாறு பூண்டு, சிறிது இஞ்சியை தட்டி எடுத்து அதன் சக்கை, 4 அல்லது 5 மிளகாய் வற்றல் ஆகியவற்றை வாணலியில் எண்ணெயில் வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 2 அல்லது 3 ஸ்பூன் அளவு களாக்காய் விழுதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்க வேண்டும். பின்னர் இதை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொண்டால் களாக்காய் ஊறுகாய் ரெடி.

களாக்காயில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் சி உள்ளது. இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகையை தடுக்கக் கூடியதாக உள்ளது. ரத்தகசிவை தடுக்கக் கூடியதாகவும் உள்ளது. பற்களில், ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்தக் கூடியது. வைட்டமின்சி குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. பசியை தூண்டுகிறது. ஈரலுக்கு பலம் தரக் கூடியது. மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கிறது.

பித்தத்தை போக்கி, வாய் கசப்பை நீக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது. குமட்டலை தடுத்து நிறுத்துகிறது. புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் கிடைக்கும் இந்த களாக்காயை பச்சையாகவோ, அல்லது இது போன்று ஊறுகாயாகவோ செய்து வைத்து பயன்படுத்தி வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது.

அதே போல களாக்காயின் வேர்களை பயன்படுத்தி அதி தாகம், நாவறட்சிக்கான ஒரு எளிமையான மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். களாக்காய் செடியின் வேர்ப்பொடியை ஒரு ஸ்பூன் அதனுடன் சம அளவு சர்க்கரை ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இதை காலை, மாலை இரு வேளையும் எடுத்து வந்தால், நா வறட்சி, அதி தாகம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply