பாலியல் பலாத்காரத்தை தடுக்க புதிய கருவி

Loading...

பாலியல் பலாத்காரத்தை தடுக்க புதிய கருவிபாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் ராஜஸ்தானை சேர்ந்த, மாணவர் ‘ஷாக்’ அடிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இந்த கருவி சற்று வித்தியாசமான. இதனை பெண்கள் வாட்ச் போல கையில் அணிந்து கொள்ளலாம். யாராவது தவறான நோக்கத்தில் தொட்டாலே 220 வால்ட் மின்சாரம் எதிராளி மீது பாயும். அடுத்த நிமிடமே அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு விடும். இதில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடமும் போலீஸ் அறிந்து கொள்ளலாம்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் ராஜஸ்தானை சேர்ந்த நிரஞ்சன் சுதாகர் என்ற மாணவர் தயாரித்திருந்த இந்த கருவிதான் முதலிடத்தை பிடித்தது. இவர் ஜலோர் மாவட்டததில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த கருவியை கண்டுபிடித்த நிரஞ்சன் இது குறித்து கூறுகையில், ”டெல்லி மருத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தது எனக்குள் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. நமது இந்திய சகோதரிகளுக்கு யாருக்கும் அது போன்ற ஒரு நிலை வரக் கூடாது என்ற எண்ணத்தில்தான் விட முயற்சியுடன் இந்த கருவியை கண்டுபிடித்தேன்” என்றார்.

அதே போல் கிளவுஸ் போலவும் இதனை கையில் அணிந்து கொள்ளலாம். அதில் ஒரு சிம்கார்டு, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கும். இதனை தயாரிக்க ரூ. 500 தான் ஆகிறது. இதில் உள்ள ரகசிய பொத்தானை அழுத்தினாலேயே 220 வோல்ட் மின்சாரம் பாய்ந்து எதிராளியை நிலை குலைய செய்து விடும்.

இரவு நேரத்தில் வேலைக்கு போகும் பெண்கள், முதியவர்களுக்கு கூட இந்த கருவி உபயோகமாகும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply