பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு

Loading...

பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) பூண்டு – 6 பற்கள் (தட்டியது) தக்காளி – 2 (அரைத்தது) பட்டை தூள் – 1 சிட்டிகை மிளகு தூள் – 1 டீஸ்பூன் மாதுளை – 1 (சுத்தம் செய்தது) வால்நட்ஸ் – 1/4 கப் (வறுத்தது) எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து சூடேற்றி, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அதில் சிக்கனை சேர்த்து உப்பு தூவி, 4-5 நிமிடம் மிதமானது தீயில் வதக்கி விட வேண்டும். சிக்கனானது பொன்னிறமாக மாறும் போது, அதில் பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். பின் மிக்ஸியில் மாதுளை மணிகளைப் போட்டு அரைத்து, அதனை சிக்கனுடன் சேர்த்து 8-10 நிமிடம் நன்கு கிளறி, வேக வைக்க வேண்டும். பிறகு அதில் வால்நட்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 20-25 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெடி!!! இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply