பாதாம் கீர்

Loading...

பாதாம் கீர்
தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு – 100 கிராம்
சீனி – 100 கிராம்
பால் – 1 கப்
ஏலக்காய் – 3
குங்குமப்பூ – சிறிதளவு
கேசரி பௌடர் – 1 டீஸ்பூன் (மஞ்சள் கலர்)


செய்முறை :

பாதாம் பருப்பை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும்.

மறுநாள் அதிலுள்ள தோலை நீக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் பாலைக் காய்ச்சி, சீனி, அரைத்த பாதாம் விழுது சேர்த்து கிளறவும்.

பின்னர் கேசரி பௌடர், ஏலக்காய் சேர்த்து கலந்து இறக்கவும்.

சிறிதளவு பாலை தனியாக காய்ச்சி அதில் குங்குமப்பூவை அரைமணி நேரம் ஊற வைத்து, பாதாம் கீருடன் கலந்து, சிறிது நேரம், ஃப்ரிட்ஜில் வைத்திருந்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply