பயனர்களின் நலன் கருதி டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை

Loading...

பயனர்களின் நலன் கருதி டுவிட்டரின் அதிரடி நடவடிக்கைஅண்மைக் காலமாக சைபர் குற்றங்கள் சடுதியாக அதிகரித்துள்ளமை தெரிந்ததே.

இதனால் சமூக வலைத்தளங்களிடமிருந்து தனிநபர் தகவல்களை பெறுவதற்கு பல நாட்டின் புலனாய்வு அமைப்புக்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

இதுவரை காலமும் சம்பந்தப்பட்ட நாட்டின் நலன் கருதி சில சமூகவலைத்தளங்கள் ஒப்பந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தகவல்களை குறித்த புலனாய்வு அமைப்புக்களிடம் வழங்கி வந்தன.

ஆனால் டுவிட்டர் தளம் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதாவது டுவிட்டர் தளமானது Dataminr எனும் வலையமைப்புடன் இணைந்தே தனது சேவையை வழங்கிவருகின்றது.

டுவிட்டரில் பரிமாறப்படும் ஒவ்வொரு விடயங்களும் Dataminr தளத்தினுடாகவே பகிரப்படும்.

இதை சாதகமாகப் பயன்படுத் Dataminr தளமானது அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு கடந்த 2 வருடங்களாக தகவல்களை வழங்கி வந்தது.

இதனால் Dataminr நிறுவனத்தின் 5 சதவீதமான பங்குகளைக் கொண்டுள்ள டுவிட்டர் அந் நிறுவனத்தின் ஊடாக தகவல்கள் பரிமாற்றப்படுவதை நிறுத்தவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply