பப்பாளி உடல் வெப்பத்தை அதிகரிக்குமா

Loading...

பப்பாளி உடல் வெப்பத்தை அதிகரிக்குமாவருடம் முழுவதும் விலை குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. மேலும் பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட. அத்தகைய பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதனால் அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஆனால் சிலர் பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். அது உண்மையா இல்லையா என்று யாருக்கும் சரியாக தெரியாது. இருப்பினும் அதை நம்பிக் கொண்டு நிறைய மக்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.
உண்மையிலேயே பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்குமா என்பதையும், பப்பாளியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சத்துக்கள்

பப்பாளியில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை இருப்பதோடு, கனிமச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல அதிகமாக உள்ளன.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து

மற்ற பழங்களை விட ஏராளமான சத்துக்களை பப்பாளி உள்ளடக்கி இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்தால் தான், உடல் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

காரணம்

இதற்கு காரணமாக, பப்பாளியில் உள்ள ஒருசில ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலினுள் அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அப்படியே உடலினுள் தங்கி, அதன் காரணமாக உடல் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

செரிமானம் சீராகும்

பப்பாளியை ஒருவர் தனது அன்றாட உணவில் சிறிது எடுத்து வருவதன் மூலம், அதில் உள்ள பாப்பைன் என்னும் செரிமான நொதி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பப்பாளியை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலில் உள்ள கிருமிகள், குடல் புழுக்கள் அல்லது வேறு வகையான நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

புற்றுநோயை எதிர்க்கும்

சமீபத்திய ஆய்வில் பப்பாளி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்துப் போராடி, உடலை புற்றுநோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பப்பாளி கணையம் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கிறதாம்.

சரும பராமரிப்பு

பழங்களிலேயே பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவும் ஓர் சிறந்த பழம். இதனை உட்கொள்வதோடு, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், பல சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். மேலும் தற்போது விற்கப்படும் பல க்ரீம்களில் பப்பாளி முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவதால், பப்பாளியை தவிர்க்காதீர்கள்.

குறிப்பு

ஆகவே பப்பாளி உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்று நினைத்து, முழுமையாக தவிர்க்காமல், அளவாக உட்கொண்டு, முடிந்த அளவில் அதன் நன்மைகளைப் பெற முயற்சி செய்யுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply