பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும்

Loading...

பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும்பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா என ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின்படி தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இறைச்சியிலும் புற்றுநோயை தோற்றுவிக்கும் காரணிகள் இருப்பதாகவும், ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply