பஞ்சாபி முட்டை மசாலா

Loading...

பஞ்சாபி முட்டை மசாலா
தேவையான பொருட்கள்:
முட்டை – 4 (வேக வைத்து தோலுரித்தது) வெங்காயம் – 1 (நறுக்கியது) பிரியாணி இலை – 1 சீரகம் – 1 டீஸ்பூன் தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மாங்காய் தூள் – 1 டீஸ்பூன் காய்ந்த வெந்தய இலை – 1 டேபிள் ஸ்பூன் (கையால் பொடி செய்தது) உப்பு – தேவையான அளவு கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1 கப்
மசாலா பேஸ்ட்டிற்கு…
வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 1 இன்ச் பூண்டு – 5 பற்கள் கிராம்பு – 2 பட்டை – 1 சோம்பு – 1 டீஸ்பூன் தக்காளி – 2
செய்முறை:
* முதலில் மசாலா பேஸ்ட்டிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். * பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள், தக்காளி சாறு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும். * பின்னனர் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும். * பின் உப்பு, கரம் மசாலா சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கொதிக்க விட்டு, காய்ந்த வெந்தய இலையை தூவி இறக்கினால், சுவையான பஞ்சாபி முட்டை மசாலா ரெடி!!!

Loading...
Rates : 0
VTST BN