நோக்கியா 308 vs சோனி எக்ஸ்பீரியா டிப்போ

Loading...

நோக்கியா 308 vs சோனி எக்ஸ்பீரியா டிப்போஎத்தனை புதிய தொழில் நுட்ப வசதிகள் வந்தாலும், டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போனுக்கு சிறந்த வரவேற்பு குறைவதே இல்லை. அந்த வகையில் சிறந்த டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த ஒப்பீடு சிறப்பாக உதவும்.

நோக்கியா-308 மற்றும் ஸ்மார்ட்போன் பற்றி ஒப்பீட்டினை பார்க்கலாம். ஆஷா-308 போன் 3 இஞ்ச் திரை வசதியினையும், 400 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும்.

எக்ஸ்பீரியா டிப்போ டயூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். இந்த திரையின் மூலம் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 800 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும் பிராசஸரைகொண்டதாக இருக்கும். ஆஷா-308 ஸமார்ட்போன் நோக்கியா வரிசையில் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டதாக இருக்கும்.

எக்ஸ்பீரியா டிப்போ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஆஷா-308 போனில் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும், எக்ஸ்பீரியா டிப்போ ஸ்மார்ட்போனில் வீடியோ காலிங் வசதியினையும் பெற முடியும். புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங் வசதி போன்றவற்றை பெற உதவும் இந்த
ஸ்மார்ட்போன்களின் கேமராவின் மூலம் வீடியோகாலிங் வசதியினை பெற முடியாது. இதில் ஸ்மார்ட்போன்களில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை.

நோக்கியா ஆஷா-308 ஸ்மார்ட்போனில் 20 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும், எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஸ்மார்ட்போன் 2 ஜிபி மெமரி வசதியினை வழங்கும். ஆனால் இந்த இரண்டும் போன்களிலுமே 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளும் வசதி உள்ளது.

ஆஷா-308 போனில் ப்ளூடூத், யூஎஸ்பி வசதிகள் வழங்கப்படும். இதில் 1,110 எம்ஏஎச் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 510 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும்
வழங்கும். இதனால் 3ஜி மற்றும் வைபைவசதிக்கு இந்த போன் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதனால் 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 360 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை கொடுக்கும்.

ஆஷா வரிசையில் உள்ள மற்ற போன்கள் ரூ. 5,300 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும். இதனால் இந்த நோக்கியா ஆஷா-308 போனும் இந்த விலையினை ஒத்திருக்கும் என்று கருதப்படுகிறது. சோனி எக்ஸ்பீரியா டிப்போவில் இரண்டு வெர்ஷன்கள் உள்ளன. இதில் சிங்கிள் சிம் மற்றும் டியவல் சிம் என்று இரண்டு மாடல்களை பெறலாம்.

Loading...
Rates : 0
VTST BN