நோக்கியா 112 குறைந்த விலையில் கூடுதல் வசதிகள்

Loading...

நோக்கியா 112 குறைந்த விலையில் கூடுதல் வசதிகள்குறைந்த விலை மொபைல் போன்களில் சிறந்ததாக, கூடுதல் வசதிகள் கொண்டதாகத் தேடினால், நம் கண்களில் தட்டுப்படும் போன்களில், நோக்கியா 112 ஒன்றாகும்.

இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு சிம்களை இயக்கலாம். இரண்டு சிம்களில், ஒன்று மினி சிம் ஆக இருக்கும்.

இதன் பரிமாணம் 110.4×46.9×15.4 மிமீ. எடை 86 கிராம்.

பார் டைப் வடிவில் உள்ளது இந்த மொபைல். 1.8 அங்குல அகலத்தில், டி.எப்.டி. திரை கிடைக்கிறது.

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 16 எம்.பி. உள் நினைவகம், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் தொழில் நுட்பங்கள், புளுடூத், 0.3 எம்பி திறன் கொண்ட கேமரா, வீடியோ பதிவு மற்றும் இயக்கம், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதி, எம்பி3 பிளேயர், ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன.

இந்த மொபைலில் 1400 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.

இது 840 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது.

14 மணி நேரம் தொடர்ந்து பேசும் சக்தியைத் தருகிறது.

பாடல்களை 27 மணி நேரம் தொடர்ந்து இயக்குகிறது.

இதன் கதிர்வீச்சு 1.30 W/kg என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 2,500 மட்டுமே.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply