நோக்கியா நிறுவனம் வெகு விரைவில் களமிறக்க இருக்கும் லூமியா 820

Loading...

நோக்கியா நிறுவனம் வெகு விரைவில் களமிறக்க இருக்கும் லூமியா 820நோக்கியா நிறுவனம் தனது லூமியா வரிசையில் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை சீரான இடைவெளியில் களமிறக்கி வருகிறது. இந்த லூமியா போன்கள் நோக்கியாவிற்கு நல்ல லாபத்தையும் பெற்றுத் தருகின்றன. அதாவது இந்த லூமியா போன்கள் உலக அளவில் நன்றாக விற்பனையாகி வருகின்றன.

இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் லூமியா 820 என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய போனின் வரவிற்காக நோக்கியாவின் தீவிர ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் லூமியா 830 என்ற புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க இருப்பதாக சீனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தகவல் மட்டும் அல்லாமல் இந்த லூமியா 830 போனின் படங்களையும் சீனாவிலிருந்து இணைய தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர். இது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது.

இந்த போன் 4 வண்ணங்களில் வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதோடு இந்த போன் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்குகிறது. ஆனால் இதைப் பற்றி நோக்கியா அதிகார்ப்பூர்வமாக எந்தவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply