நோக்கியாவின் ஆஷா 308 மொபைல் அறிமுகம்

Loading...

நோக்கியாவின் ஆஷா-308 மொபைல் அறிமுகம்ஆஷா வரிசை மொபைல்கள் மக்களிடையே அதிக பரபரப்பை உண்டு செய்தது. நோக்கியாவின் ஆஷா-308 மொபைல் தற்பொழுது நமது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைல் அனைவரும் விரும்பும் டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கும் சிறப்பாக துணை புரியும். தொடுதிரை வசதி கொண்ட இந்த மொபைலில், இன்று அனைவரின் மனதையும் கவர்ந்த ஃபேஸ்புக் பக்கத்தினை அழகாக அப்டேட் செய்யலாம். இந்த மொபைலில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஏப் போன்ற வசதிகள் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மொபைலில் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படங்களை எடுத்து குவிக்கலாம். இதன் 2 மெகா பிக்ஸல் கேமரா, 1600 X 1200 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இதில் 20 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும், 128 எம்பி ரோம், 64 எம்பி ரேம் ஆகிய வசதிகளை எளிதில் பெறலாம்.

ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி ஆகிய வசதிகளை, மொபைலில் தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ளவும், தகவல்களை எளிதாக பதிவேற்றம் செய்து கொள்ளவும் பயன்படுத்த முடியும். நோக்கியாவின் ஆஷா-308 மொபைலில் ஜிபிஆர்எஸ் வசதியினை 85.6 கேபிபிஎஸ் வரை பயன்படுத்த முடியும். எட்ஜ் தொழில் நுட்ப வசதியினை 236.8 கேபிபிஎஸ் வரை பெற முடியும்.

ஸ்டான்டர்டு லித்தியம் அயான் 1110 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 510 மணி நேரம் ஸ்டான்-பை டைம் ஆகியவற்றையும் பெற முடியும். நமது நாட்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானதில் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் சந்தோஷமாக தான் இருக்கும்.

ஆனால் இதன் விலை சந்தோஷம் அளிக்கும் வகையில் இருக்குமா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதன் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் இந்த ஆஷா-308 மொபைல் ரூ. 5,685 விலை கொண்டதாக இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply