நீங்கள் கடலில் வாழ்ந்தால் எப்படியிருக்கும்

Loading...

நீங்கள் கடலில் வாழ்ந்தால் எப்படியிருக்கும்நீங்கள் கடலில் வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்று எப்போதாவது கனவு கண்டதுண்டா? ஆம், இந்த UFO (Unidentified Floating Object) வீடு வருங்காலத்தில் உங்கள் கனவை நனவாக்கலாம்.

இவ் வீடு இத்தாலியைச் சேர்ந்த கம்பனியொன்றினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆகக் கூடியவேகம் 6.5 km/h (4 mph or3.5 knots)இல் உலகை வலம் வரக்கூடியது.

இது தனக்குத் தேவையான சக்தியை கிட்டத்தட்ட40 சதுர மீற்றர் ( 430 சதுர அடி) சூரியகலம் மூலம் பெற்றுக்கொள்கிறது.

இச்சூரிய கலமானது மறைக்கப்படக் கூடியவாறு மேல் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புயல்களிலிருந்து அதனை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அத்துடன் காற்று மற்றும் நீர் விசையாழிகளை பொருத்தி போதுமான அளவு சக்தியைப்பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெருவிக்கப்படுகிறது. இதன் மூலம் முகில் காலங்களில் அதை இயக்கக் கூடியதாகஇருக்கும்.

தேவையான குடிநீரானது சூரிய வலு சுத்திகரிப்பு முறைகள் மூலமும், மழை நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் மூலமும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. மரக்கறி உணவுகள் சூழவுள்ள தோட்டத்திலிருந்து பெறப்படுகிறது.

அதன் இடியில் நீருக்குள் அமிழ்ந்த நிலையில் ஒரு ஜன்னல் உள்ளது, அதனூடாக கடலுக்கடியில் செல்லும் உயிரினங்களை அவதானிக்க முடியும் எனவும், தேவையான குளிர்ச்சியை உணரமுடியும் எனவும் தெருவிக்கப்படுகிறது.

இதன் முக்கிய அமைப்பானது திசைகாட்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது அதனை விரும்பிய திசையில், விரும்பிய கோணத்தில் வைத்திருக்க உதவும்.

மேற்படி கம்பனியானது முதல் UFO வீட்டினை வடிவமைக்க கிட்டத்தட்ட US$800,000 செலவாகும் எனவும், ஆனால் இத்தொகைபின் US$200,000 ஆக குறைவடையலாம் எனவும் தெருவிக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply