நீங்களும் அழகிதான்

Loading...

நீங்களும் அழகிதான்அளவான புன்னகை நாம் ஒருவரைப் பார்த்தவுடன் முதலில் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வது புன்னகை தான். மாதுளை பிளந்தாற் போல் இருக்க வேண்டும் புன்னகை. புன்னகை வேறு. சிரிப்பு வேறு. புன்னகை என்பது லேசாக இரு உதடுகள் விரிந்து முத்து வரிசை இரண்டும் தெரிவது போல் சத்தமில்லாமல் சிரிப்பது புன்னகை. வாயை நன்கு திறந்து ஹா… ஹா என்று சத்தமிட்டு சிரிப்பதுதான் சிரிப்பு.பெண்கள் பொது இடம், அலுவலகம் போன்ற இடங்களில் இவ்வாறு சிரித்தால் ஆகுமா-? அது அழகு குறைவாகும், அதே சமயம் நாகரிகக் குறைவாகவும் தோன்றும்.
எப்போதும், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு புன்னகை தான் சிறந்த அணிகலன். புன்னகையால் சாதிக்க முடியாத ஒன்றும் உண்டோ? அடுத்து கட்டான உடல் வாகு.இதற்கு சீரான உணவு,முறையான உடற்பயிற்சி தேவையானது.நீங்களும் ட்ரீம் கேர்ள் ஆக வேண்டாமா? காலையில் காபி, டீக்கு பதிலாக எலுமிச்சை ஜீஸ் பருகலாமே.
உணவில் கோதுமை வகையறாக்களை அதிகப்படுத்துங்கள். கீரை,பால்,முட்டை,பச்சைக் காய்கறிகள்,பழங்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கலாமே. எண்ணெய் வகைகள், மாமிச வகைகள், பீட்சா,ஐஸ்க்ரீம்,ஃப்ரெஷ்க்ரீம் ஐட்டம்,பனீர் போன்ற உணவு வகைகளின் அளவை கணிசமாக குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ முயற்சி செய்யலாம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply