நாளுக்கு நாள் உங்க தொப்பை பெருசாகுதா அதைத் தடுக்க இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க

Loading...

நாளுக்கு நாள் உங்க தொப்பை பெருசாகுதா அதைத் தடுக்க இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்கதற்போது உடல் பருமன் என்பது பலரும் அவஸ்தைப்பட்டு வரும் ஓர் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனைக் குறைக்க பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சிலர் கடுமையான உடற்பயிற்சி, டயட் என்று பின்பற்றுகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காமல் இருப்பது தான் கொடுமையான விஷயம்.
மேலும் இன்றைய சுவைமிக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பலராலும் உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்க முடிவதில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த ஆரோக்கியமற்ற, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டு விடுகிறோம்.
இதன் காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமன் மற்றும் இடுப்பளவு அதிகரிக்க ஆரம்பித்து, அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கிறோம். இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான பானம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அற்புத பானம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை கோடைக்காலத்தில் குடித்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக நீக்கப்படுவதோடு, உடல் எடையும் வேகமாக குறைக்கப்படும். மேலும் இது உடலின் நீர்ச்சத்தின் அளவையும் அதிகரிக்கும். இந்த பானமானது ஆப்பிள் சீடர் வினிகர், கிரேப்ஃபுரூட் மற்றும் தேன் கலந்து செய்யப்படுவதாகும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது, அவை கொழுப்புக்களாக மாறி உடலில் தங்கும். ஆனால் ஆப்பிள் சீடர் வினிகர், இரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, உடல் எடையைக் குறைக்க உதவும். ‘

கிரேப்ஃபுரூட்

இது பார்ப்பதற்கு ஆரஞ்சு பழம் போன்று தான் காணப்படும். ஆனால் இது கொழுப்புக்களை வேகமாக கரைக்கும் ஓர் பழம். மேலும் இந்த பழம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை வளர்ச்சியை மாற்றம் புரிய உதவும் மற்றும் உடலில் நீர்த்தேக்கத்தைக் குறைக்கும்.

தேன்

தேன் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மையில் தேன் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும். அதிலும் சுத்தமான மலைத் தேன் இரத்த சர்க்கரை அளவை நிலைநிறுத்தி, உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்

கிரேப்ஃபுரூட் – 1
தேன் – 1 டீஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டீஸ்பூன்

செய்முறை

கிரேப்ஃபுரூட்டின் சதைப்பகுதியை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து நன்கு அடித்து பருக வேண்டும்.

எப்போது பருக வேண்டும்?

இந்த பானத்தை ஒரு வாரம் தொடர்ந்து மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு முன் ஒரு டம்ளர் பருக வேண்டும். பின் ஒரு வாரம் இடைவெளி விடவும். பின் மீண்டும் ஒரு வாரம் பருகி, ஒரு வாரம் இடைவெளி என பின்பற்றி வந்தால், உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு

ஒருவேளை உங்களுக்கு கிரேப்ஃபுரூட் அல்லது பப்பளிமாஸ் பழம் கிடைக்காவிட்டால், அதற்கு பதிலாக ஆரஞ்சு பழத்தைப் பயன்படுத்தலாம். அதே சமயம் இந்த ஜூஸைப் பருகும் போது சரியான டயட்டுடன், உடற்பயிற்சியையும் அன்றாடம் பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply