நவம்பர் 2ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ஐபோன்5 | Tamil Serial Today Org

நவம்பர் 2ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ஐபோன்5

Loading...

நவம்பர் 2ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ஐபோன்-5வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 2ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரம் பற்றிய கருத்துகளும் வெளியாகி வருகிறது.

ஐபோன்-5 ஸ்மார்ட்போன் தீபாவளி சமயத்தில் அறிமுகமாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருந்தது. இந்நிலையில் ஐபோன்-5 வருகிற நவம்பர் 2ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றது.

இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று 3 மாடல்களில் மெமரி வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மூன்று வெர்ஷன்களின் விலை பற்றிய விவரங்களும் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய எதிர்பார்ப்புகள், வலைத்தளங்களில்வெளியாகி உள்ளது.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி வெர்ஷன் ரூ. 45,500 விலையினையும், 32 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ.52,500விலையினையும், 64 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 59,500 விலையையும் கொண்டாதக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான வரவேற்பை பெறும் என்று கூறலாம்.

இந்த ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டரில் பெற முடியும் என்ற தகவலை படித்த, வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை விவரம் பற்றிய தகவல்கள் சிறப்பானதாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN