தொப்பையை குறைக்கும் ஜூஸ்கள்

Loading...

தொப்பையை குறைக்கும் ஜூஸ்கள்உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளும், சீரான டயட் முறைகளும் அவசியமான ஒன்று.

அந்த வகையில் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க சில சிறப்பான ஜூஸ்கள் உள்ளன.நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழும்புகளை குறைக்க முடியும். இதனால் உடலில் நல்ல மாற்றம் தெரியும். இது ஆயுர்வேத மருத்துவத்திலே கூறப்பட்டுள்ளது.மசாலா பால்

பாலுடன் மஞ்சள் மசாலா சேர்த்து பருகும் போது உடலில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்படுகிறது.

தவிர, மூட்டு வலி, தசை பிடிப்பு, நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் கபம் போன்றவற்றுக்கும் இது நல்ல தீர்வளிக்கிறது.இஞ்சி டீ

உடல் எடைக் குறைப்பில் மற்றுமொரு சிறந்த பானம் இஞ்சி டீ. இது உடலில் இருக்கும் வாதம், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது.

மேலும், குடலியக்கம் மற்றும் செரிமான செயல் திறனை ஊக்குவித்து உடல் எடையை குறைக்கிறது.சர்க்கரையில்லாத கிரீன் டீ

தினமும் கிரீன் டீ பருகுவதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் வேகமடைகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை அழிக்கவும் உதவுகிறது.

இதன் பலன்கள் முழுவதும் கிடைக்க சர்க்கரையை தவிர்க்க வேண்டியது அவசியம். தேவை என்றால் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.ப்ளேக் காபி

ப்ளேக் காபி அதிகப்படியான பசியை கட்டுப்படுத்துகிறது. கிரீன் டீயை போலவே, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் பானமாக திகழ்கிறது.காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு தேவையான சக்தியும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இது உதவுகிறது. இதனால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை தவிர்க்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply