தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்பில் தி.மு.க முன்னிலையில்

Loading...

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் சில மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தி.மு.க முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு பதிவு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் நேற்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க காங்கிரஸ் கூட்டணி, தே.மு.தி.க- ம.ந.கூட்டணி – த.மா.கா அணி, பா.ம.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி என ஆறுமுனைப் போட்டி கொண்டதாக 2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடம்பெற்றது.


இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்த பின்னர் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலேயே மேற்படி ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது,


டைம்ஸ் நவ் – சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு 139, தி.மு.க கூட்டணிக்கு 78, மற்ற கட்சிகளுக்கு 17 இடங்கள் கிடைக்கும் தெரிவித்துள்ளது. ஏபிபி கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க கூட்டணிக்கு 95, தி.மு.க கூட்டணிக்கு 132, பா.ஜ.க-வுக்கு 1, மற்ற கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைக்கும் கூறியுள்ளது.


நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க கூட்டணிக்கு 95- 99 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 114- 118 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க கூட்டணிக்கு 89- 101 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 124- 140 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-11 இடங்களும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.


நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க கூட்டணிக்கு 81- 99 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 129- 151 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 2- 6 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆக, வெளியிடப்பட்ட 5 கருத்துக்கணிப்புகளில் அ.தி.மு.க கூட்டணி பெரும்பான்மை பெறும் என டைம்ஸ் நவ் – சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஏபிபி, இந்தியா டுடே, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ் ஆகிய நான்கு கருத்துக்கணிப்புகளிலும் தி.மு.க பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply