தினமும் மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா

Loading...

தினமும் மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமாபழங்களின் ராஜா தான் மாம்பழம். இந்த மாம்பழம் கோடையில் அதிகம் விலை மலிவில் கிடைக்கும். மேலும் மாம்பழம் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்றும் கூட. சில மாம்பழ அடிமைகளும் உள்ளனர். இத்தகைய மாம்பழத்தைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும்.
மாம்பழம் என்று சொல்லும் போது, டயட்டில் இருப்போர் பலரது மனதிலும் அதனை சாப்பிட்டால் குண்டாக வாய்ப்புள்ளதோ என்ற சந்தேகம் எழும். உங்களுக்கு அந்த சந்தேகம் உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். முக்கியமாக மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜூஸை விட பழம் தான் சிறந்தது

பலரும் மாம்பழத்தை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் போன்று செய்து சுவைக்க விரும்புவார்கள். ஆனால் மாம்பழத்தை ஜூஸாக செய்து எடுப்பதை விட, அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் ஜூஸாக செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

நார்ச்சத்துள்ள பழம்

ஒரு மாம்பழத்தில் ஏராளமான நார்ச்சத்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், மாம்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள்

கோடையில் பகல் நேரத்தில் நன்கு சுறுசுறுப்புடன் இருக்க வேண்டுமானால், கோடைக்கால பழமான மாம்பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் உடலுக்கு ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் ஏராளமாக உள்ளன. மேலும் இப்பழத்தை உட்கொண்டால், உடலின் ஆற்றல் அதிகரித்து, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

இரத்த சர்க்கரை அதிகரிக்குமா?

மாம்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இதனை உட்கொண்டால், சர்க்கரையின் அளவு அதிகரிக்குமோ என்ற அச்சம் தேவையில்லை.

கொலஸ்ட்ரால் பிரச்சனை வருமா?

மாம்பழம் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா என்ற சந்தேகம் உள்ளதா? நிச்சயம் இல்லை. மாம்பழத்தில் உள்ள பெக்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க தான் உதவுமே தவிர, அதிகரிக்காது. ஆகவே கொலஸ்ட்ரால் பற்றி அச்சப்பட வேண்டியதில்லை.

நோயெதிர்ப்பு சக்தி

கோடையில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், மாம்பழத்தை உட்கொள்வதன் மூலம், அதிகரிக்கலாம். ஒருவருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால், உடலின் ஆற்றலும் குறையும். ஆகவே மாம்பழத்தை உட்கொண்ட்டு, நோயெதிர்ப்பு சக்தியை மட்டுமின்றி, உடலின் ஆற்றலையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு கலோரிகள் உள்ளது?

ஒரு மாம்பழத்தில் 135 கலோரிகள் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு சராசரி மனிதன் 2,500 கலோரிகள் வரை எடுக்கலாம். ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரிகள் வரை தான் எடுக்க வேண்டும். எனவே நீங்கள் மாம்பழ விரும்பிகளாக இருந்தால், அதற்கேற்றாற் போல் டயட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்து, மாம்பழங்களை எடுக்கலாம்.

எடை அதிகரிக்குமா?

உண்மையில் மாம்பழத்தில் கொலஸ்ட்ராலே கிடையாது. சொல்லப்போனால், ஒரு மாம்பழத்தில் 0% கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே இதனை கோடையில் தினமும் சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஒருவேளை நீங்கள் 3 மாம்பழத்தை சாப்பிட்டால் கூட 400 கலோரிகள் தான் இருக்கும். எனவே உங்கள் உடல் எடையும் அதிகரிக்க வாய்ப்பில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply