தஹி சிக்கன்

Loading...

தஹி சிக்கன்

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ குறைந்த கொழுப்பு கொண்ட தயிர் – 2 1/2 கப் வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) சீரகப் பொடி – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) தண்ணீர் – 1 கப்

செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் சீரகப் பொடி, பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் மற்றும் தயிர் ஊற்றி கிளறி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 30 நிமிடம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து, தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 10 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்பு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சிக்கன் வெந்துவிட்டால், அடுப்பை அணைத்து இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான தஹி சிக்கன் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply