தலைவலியால் அவஸ்தையா இதை ட்ரை பண்ணி பார்க்கலாமே

Loading...

தலைவலியால் அவஸ்தையா இதை ட்ரை பண்ணி பார்க்கலாமேபொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான் தலைவலி.

தலைவலிக்கு அடிப்படை கோபம், டென்ஷன் மற்றும் மனச்சோர்வுதான்.

தேவையில்லாமல் கோப்படும் போது ரத்த அழுத்தம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கிவிடும்.

அவ்வாறான நேரங்களில் ரிலாக்ஸ் செய்வது அவசியம்.

* கட்டில் அல்லது தரையில் தளர்வாக படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவேண்டும். கண்களை இறுக்காமல் லேசாக மூடிக்கொள்ள வேண்டும்.

மனம் சமாதானம் அடைந்த பின்னர் யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை பெறலாம், இதன் மூலம் இதயமும் இதமாகும்.

* கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும்.

இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்வதால் தலைவலியின் தீவிரம் குறையும்.

* ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம்.

* தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply