தலைவலிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

Loading...

தலைவலிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்# டென்ஷனால் ஏற்படும் தலைவலி,

# பித்த தலைவலி,

# அஜீரணத் தலைவலி,

# சைனஸ் தலைவலி

என காரணத்தின் அடிப்படையில் தலைவலி வகைப்படுத்தப்படுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டிய புதிய வகை தலைவலி கூட எதிர்காலத்தில் வரலாம்.

அக்கு நாடிப் பரிசோதனை மூலம் ஒரு தலைவலி ஏற்படுவதற்கான காரணம், அதன் தீவிரம் என மொத்த ஜாதகத்தையே திரட்டி விடலாம்.

அடுத்தது, எளிமையான சிகிச்சை. அக்கு சிகிச்சையை ஏனோதானோவென்று இல்லாமல், நிதானமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் எடுக்க வேண்டிய சிம்பிள் சிகிச்சைகள் இங்கே…


1. சாதாரண தலைவலி:

தலைவலியின் அறிகுறி தெரிந்ததுமே, வலது கை கட்டை விரலை இடது கையின் 5 விரல்களாலும் சேர்த்துப் பிடித்து, 30 முறை சுழற்றுங்கள். இதேபோல இடது கை கட்டை விரலை வலது கையின் மொத்த விரல்களாலும் 30 முறை சுழற்றுங்கள். சாதாரண தலைவலி இதில் நிச்சயம் பறந்துவிடும்.

வெறும் விரல்களால் சுழற்றுவதற்குப் பதில் ‘சூஜோக் ரிங்’ எனப்படும் வண்ண வளையம் கொண்டு சுழற்றியும் இந்த சிகிச்சையைச் செய்யலாம்.


2. பித்தத் தலைவலி:

ஏதாவது ஒரு பக்கமாக வலி வாட்டி எடுத்து, கூடவே வாந்தியும் ஏற்படுகிறது என்றால் அது பித்தத் தலைவலி. வாந்தி எடுத்து முடித்த மறுவினாடியே தலைவலி குறைந்தது போல் இருக்கும். பித்த நீர்ப்பையின் சக்தியோட்டம் நார்மலாக இல்லாத போது வரும் தலைவலி இது. இதை குணப்படுத்துவதற்கு இரண்டே உபகரணங்கள்தான் தேவை. ஒன்று, சாதாரண ரப்பர் பேண்ட். இரண்டு, துணிகளைக் காயப்போட பயன்படுத்தும் மர கிளிப்புகள்.

முதலில் ரப்பர் பேண்டால் ஆள்காட்டி மற்றும் நடு விரல் ஆகிய இரண்டையும் இறுக்கமாகப் பிணைத்து விட வேண்டும். உடனே கட்டை விரலின் அடிப்புற மற்றும் மைய ஏரியாவை கிளிப்பின் கன்ட்ரோலுக்குள் கொண்டு வர வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து ரப்பர் பேண்டையும் கிளிப்பையும் அகற்றிவிட வேண்டும்.


3. அஜீரணத் தலைவலி:

அஜீரணத்தால் உண்டாகும் தலைவலிக்கு இதில் சின்ன மாற்றம். இங்கு ரப்பரால் இணைக்கப்பட வேண்டியது மோதிர விரலும் சுண்டு விரலும். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து, கையின் மேற்பகுதியில் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சந்திக்கிற ஜங்ஷன், முழங்கைக்குக் கொஞ்சம் மேலே, மற்றும் கண் புருவங்களில் நடுப்பகுதி என இந்த மூன்று இடங்களில் விரலால் ஓரளவு இதமாக அழுத்தினாலே போதும்.


4. காய்ச்சல் தலைவலி:

தலைவலியோடு காய்ச்சலும் சேர்ந்து கொண்டால், இந்த சிகிச்சையினூடே வலது புறம் திரும்பி 5 நிமிடங்கள் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இதுவும் சிகிச்சையின் ஒரு பகுதியே.

சிகிச்சை முறையைத் தெரிந்துகொண்டீர்கள். அடுத்த முறை தலை வலித்தால் நீங்களாகவே சிகிச்சையை ஆரம்பித்து விடலாம்தானே? தப்பில்லை. ஏனென்றால், இந்த எளிய சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏதும் வந்துவிடப் போவதில்லை. ஆனால், தயக்கமோ சந்தேகங்களோ இருப்பவர்கள் மட்டும் தகுதியான அக்குபிரஷர் நிபுணர்களிடம் ஒரு அமர்வு போய் வந்த பின்னர் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

ஒருமுறை கற்றுக் கொண்டால் ஆயுளுக்கும் நன்மை பயக்கும் இந்த அற்புதத்தைச் சொல்லித் தருவதற்காகவே காத்திருக்கிறார்கள் நிறையப் பேர்.


ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்

# தலைவலி இல்லாதவர்கள் கூட, கட்டை விரலைச் சுழற்றுவதை தினந்தோறும் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாகவே செய்து வரலாம். எதிர்காலத் தலைவலியை இது தடுக்கும்!

# தூக்கம், பசி இரண்டும் தலைவலியைத் தூண்டுகிற முக்கியக் காரணிகள். சிகிச்சை நல்ல பலன் தர வேண்டும் என்றால், போதுமான உறக்கம் அவசியம். சரியான நேரத்தில் சரியான அளவு உணவு உட்கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply