தலைமுடி உதிர்தல் பொடுகுத் தொல்லையை தடுக்க இஞ்சி | Tamil Serial Today Org

தலைமுடி உதிர்தல் பொடுகுத் தொல்லையை தடுக்க இஞ்சி

Loading...

தலைமுடி உதிர்தல் பொடுகுத் தொல்லையை தடுக்க இஞ்சிநீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா?
அதற்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் அலைபவரா?

அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இங்கு மருத்துவ குணம் அதிகம் நிறைந்த ஓர் பொருளான இஞ்சியைக் கொண்டு எப்படி தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதென்பது கொடுக்கப்பட்டுள்ளது.

இஞ்சி முடியின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிப்பதோடு, முடி உதிரும் பிரச்சனை இருந்தாலும், அதனை சரிசெய்து, மயிர்கால்களை வலிமையாக்கும்.

பொடுகுத் தொல்லையால் பெரும்பாலான மக்கள் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்றினை 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை அகலும்.

உங்களுக்கு நீளமான முடி வேண்டுமானால், இஞ்சியைப் பயன்படுத்துங்கள். இஞ்சியில் உள்ள பொருட்கள் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

இஞ்சியைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

இஞ்சி சாற்றினை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அதனை தலையில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து உடனே அலசி விட வேண்டும். இல்லாவிட்டால், அவை ஸ்கால்ப்பை பெரிதும் பாதித்துவிடும்.

Loading...
Rates : 0
VTST BN