தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது: ஜெயலலிதா சாதனை

Loading...

தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது: ஜெயலலிதா சாதனை

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி உள்ளது.

1111


சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி உள்ளது.
தமிழக சட்டசபைக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக் குறிச்சி, தஞ்சை ஆகிய இரு தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. அதில் 74.26 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த தடவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 6 முனைப் போட்டி ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 232 தொகுதிகளில் போட்டியிடும் 3776 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்வதற்கான ஓட்டு எண் ணிக்கை இன்று நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் 68 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு மூன்றடுக்கு கொண்ட பலத்த பாது காப்புடன் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதே சமயத்தில் மின்னணு எந்திரங்களில் பதிவாகி இருந்த ஓட்டுக்களை எண்ணும் பணியும் தொடங்கியது.

8.15 மணிக்கு சில தொகுதி களில் முன்னிலை நிலவரம் தெரியத் தொடங்கியது. முதன் முதலாக ஒரத்தநாடு தொகுதியில் தி.மு.க. முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற தொகுதி களின் முன்னிலை அடுத் தடுத்து தெரிய வந்தது.

8.30 மணியில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட்டணியும் மாறி, மாறி அதிக இடங்களைப் பெற்று முன்னிலை பிடித் தன. இந்த முன்னிலை நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறியபடி இருந்த தால் அரசியல் கட்சி பிர முகர்களிடம் பரபரப்பும் தவிப்பும் ஏற்பட்டது.

வழக்கமாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கி சுமார் 1 மணி நேரத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்த்தும் வகையில் முன்னிலை நிலவரம் சுட்டிக் காட்டி விடும். ஆனால் இந்த தடவை முன்னிலை நிலவரம் அப்படி இல்லாமல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமநிலையில் வந்தபடி இருந்தது.

இதனால் தமிழக சட்ட சபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரலாற்றில் இதுவரை இல்லாதபடி முன்னிலை நிலவரம் மிக, மிக விறுவிறுப்பாக அமைந்தது. 9.15 மணிக்கு அதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

9.30 மணிக்கு அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி மெல்ல, மெல்ல முன்னேறத் தொடங் கியது. நேரம் செல்ல, செல்ல அ.தி.மு.க., தி.மு.க. இடையிலான இட வித்தியாசம் குறைந்தது. அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி முகத்துக்கு தாவியது.


9.45 மணிக்கு அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க.வை 40 இடங்கள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளியது. அதாவது அப்போது அ.தி.மு.க. 114 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி 77 இடங்களிலும் வெற்றி வாய்ப்புடன் இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. 9.50 மணிக்கு அ.தி.மு.க. 117 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. தி.மு.க. கூட்டணி 77 இடங்களில் அப்படியே நின்று விட்டது. இதனால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியானது. பா.ம.க. 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க., பா.ஜ.க. ஆகிய மூன்று கூட்டணிகளும் பிரித்த வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக மாறி இருப்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. 12 மணி நிலவரப்படி 132 தொகுதிகளில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றது.

அ.தி.மு.க. வெற்றி என்ற தகவல் 10 மணிக்கெல்லாம் தமிழகம் முழுவதும் பரவியது. இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வினியோகம் செய்தும் அ.தி.மு.க. வெற்றியை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6-வது முறையாக தமிழக முதல்வராகிறார். இது புதிய சாதனையாகும். தமிழக அரசியல் வரலாற்றில் 6 தடவை முதல்வர் பொறுப்பை ஏற்கும் ஒரே தலைவர் என்ற சாதனையை ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி தமிழக மக்களிடம் அதிக ஆதரவு பெற்ற தன்னிகரற்ற கட்சியாக அ.தி.மு.க. திகழ்வதும் இந்த தேர்தல் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. கருத்து கணிப்புகள், வாக்கு கணிப்புகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விட்டு சரித்திர சாதனை வெற்றியை ஜெயலலிதா பெற்றிருக்கிறார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply