தக்காளி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது

Loading...

தக்காளி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காதுசிறு நீர் எரிச்சல், மேகநோய், உடலில் வீக்கம், உடல்பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது.
100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20 தான். எனவே, எவ்வளவுசாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.
பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் ‘சி’, விட்டமின்‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலை பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப்பழங்களைச் சாப்பிட்டால் போதும்.
தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடைகூடாது.
காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், விட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.
இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம்.
தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப்பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.
தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம்.
இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது.
தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது.
இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply