தகவல்களை ஐபோன்-5விற்கு பரிமாற்றம் செய்ய சில வழிகள்

Loading...

தகவல்களை ஐபோன்-5விற்கு பரிமாற்றம் செய்ய சில வழிகள்புதிதாக வாங்கிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் தகவல்களை எப்படி பரிமாற்றம் செய்வது என்பது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இதில் இருக்கும் ஐக்ளவுடு சேவையினை பயன்படுத்தி, இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் தகவல்களை ஒரு சிம் கார்டில் இருந்து இன்னொரு சிம் கார்டிற்கு எளிதாக செட் செய்து கொள்ளலாம். அதிலும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் தகவல்களை ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு மாற்ற வேண்டும் என்றால், கூகுள்மெயிலை பயன்படுத்தி, பேக்கப் வசதியினை செய்து வைத்து கொள்வது இன்னும் சிறந்ததாக இருக்கும்.

பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனில் இருந்து தகவல்களை ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு மாற்றுவது இன்னும் கொஞ்சம் சிரமமானதாக இருக்கும் என்று சொல்லலாம். ஏனெனினல் வலைத்தளத்தில் இருந்து பிளாக்பெர்ரி டெஸ்க்டாப் சாஃப்ட்வேரை முதலில் டவுன்லோட் செய்து, பின் அதை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இந்த தகவல்களை
பிசி கம்ப்யூட்டர்களில் சேர்த்த பிறகு, ஐடியூன்ஸை பயன்படுத்தி ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் தகவ்லகளை காப்பி செய்து கொள்ளலாம்.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதியினை பயன்படுத்த வேண்டும் என்றால் செட்டிங்ஸ் ஆப்ஷனிற்கு செல்ல வேண்டும். இந்த செட்டிங்ஸ் ஆப்ஷன் மூலம் வையர்லெஸ் நெட்வொர்க்கிற்கு பாஸ்வேர்டை செட் செய்ய வேண்டும். இப்படி எளிதான முறையில் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் வைபை வசதியினை பெறலாம்.

இமெயில் வசதியினை செட் செய்யவும் எளிதான வழிகள் இருக்கிறது. செட்டிங்ஸ் ஆப்ஷனில் மெயில் என்ற வசதியினை பயன்படுத்த வேண்டும். இதில் ஏடு அக்கவுன்டு என்ற இடத்தில், எந்த மெயில் அக்கவுன்ட் என்ற விவரத்தினை டைப் செய்யவும். இது போன்ற விவரங்களை பூர்த்தி செய்த பின்னர், இதில் இருக்கும் இமெயில்
ஐகானை க்ளிக் செய்யவும்.

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய வசதிகளை பயன்படுத்த நிறைய வழி முறைகள் உள்ளது. செட்டிங்ஸ் வசதியின் மூலம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் நுழைய தனியாக ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை உருவாக்க வேண்டும். இதன் பின் எளிதாக இதற்கே தேவையான அப்ளிக்கேஷன்களை டவுன்லோட்
செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply