சோதனையை கடந்தால் தான் சாதனை தலயின் 45 சிறப்பு தகவல்கள்

Loading...

News in EnglishArticleசோதனையை கடந்தால் தான் சாதனை- தலயின் 45 சிறப்பு தகவல்கள்

 

அஜித் இன்று தமிழகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தல. இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் ஏதோ திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தல அஜித்தின் வாழ்க்கை வரலாறை படிக்காதவர்கள் யாரும் இல்லை, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் இதை அறிவான்.

எனினும் அவர் பிறந்தநாள் சிறப்பு பகிர்வாக தல-45 குறித்த 45 ஸ்பெஷல் தகவல்கள்.

1) அஜித்தின் தந்தை பெயர் சுப்ரமணி, தாயார் பெயர் மோகினி, இவர் ஐதராபாத்தில் 1971ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்தார்.

2) அஜித்தின் அம்மா சிந்தி மொழியை பேசக்கூடியவர் கொல்கத்தாவை சேர்ந்தவர்,

3) அஜித் 10ம் வகுப்பு வரை மட்டுமே Asan Memorial Senior Secondary School என்ற பள்ளியில் படித்தார். இதன் பிறகு தனக்கு ஆட்டோமொபைலில் தான் ஆர்வம் அதிகம் என படிப்பை நிறுத்தினார்.

4) இதைத் தொடர்ந்து சில காலம் இவர் மெக்கானிக்காக சென்னையில் வேலை பார்த்தார்.

5) தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திருப்பூரில் சில வருடங்கள் கார்மெண்ட்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

6) ஆனால், அஜித்திற்கு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓங்கி ஒலிக்க மீண்டும் சென்னை வந்து கிடைத்த வேலை பார்த்தது மட்டுமின்றி, சில காலம் மாடலாகவும் விளம்பர படங்களிலும் நடித்தார்.

7) அஜித் முதன் முதலாக என் வீடு என் கணவர் என்ற படத்தில் சிறுவனாக நடித்திருந்தார்.

8) இதைத் தொடர்ந்து ஒரு காலணி விளம்பரத்தில் நடித்தார், இந்த விளம்பரத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

9) அஜித் தெலுங்கில் பிரேம புஷ்தகம் என்ற படத்தில் தான் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார்.

10) இயக்குனர் செல்வா அமராவதி என்ற படத்தை வேறு ஒரு ஹீரோவுடன் இணைந்து இயக்கி வந்தார், அந்த ஹீரோவின் நடிப்பு தனக்கு பிடிக்காத காரணத்தால், வேறு யாரை கமிட் செய்யலாம் என யோசிக்க, பாடகர் எஸ்.பி.பி அஜித்தை செல்வாவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

11) அஜித்திற்கு இந்த படத்தில் குரல் கொடுத்தது இன்று தமிழ் சினிமாவின் அடுத்த கமல்ஹாசன் என்று சொல்லப்படும் விக்ரம் தான்.

12) அஜித் இதை தொடர்ந்து வான்மதி, பவித்ரா என சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் இவருக்கு பெயர் கிடைக்கவில்லை.

13) அஜித்திற்கு மிகப்பெரிய ஹிட் என்று அமைந்த படம் ஆசை, இதன் பிறகு தான் ஒவ்வொருவரின் பார்வையும் அஜித்தின் மீது திரும்பியது, குறிப்பாக பெண் ரசிகைகள் அஜித்திற்கு கூடினர்.

14) 90களில் கொடிக்கட்டி பறந்த ஹீரோ டாப் ஸ்டார் பிரசாந்த்துடன் கல்லூரி வாசல் படத்தில் நடித்தார், இப்படம் நடிக்கும் போது அனைவரும் பிரசாந்திடம் கையெழுத்து வாங்க போட்டிப்போட, அஜித் ‘ஒரு நாள் நானும் கண்டிப்பாக இந்த இடத்திற்கு வருவேன்’ என்று கூறினாராம்.

15) இதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை கிட்டத்தட்ட 250 நாட்கள் ஓடி சாதனை படைத்தது, இப்படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருதும் கிடைத்தது.

16) நன்கு வளர்ந்து வரும் சமயத்தில் அஜித்திற்கு நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜாடை வயசு என தொடர்ந்து 5 படங்கள் தோல்வி.

17) இதில் உல்லாசம் படத்தில் அஜித்தும், விக்ரமும் இணைந்து நடித்திருந்தனர், இப்படத்தின் தயாரிப்பாளர் அமிதாப் பச்சன், இப்படத்தில் ஒரு பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தார்.

18) வேறு எந்த நடிகரும் வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு தோல்வியை கொடுத்தால், தமிழ் சினிமா ஒதுக்கிவிடும் என்பது நியதி. ஆனால், அஜித் மீண்டும் காதல் மன்னன் படத்தில் மீண்டார்.

19) இத்தனை நாட்கள் வெறும் காதல் பேருந்தில் பயணித்து வந்த அஜித் முதன்முறையாக ஆக்‌ஷனில் இறங்கிய படம் தான் அமர்க்களம். இப்படத்தில் தான் அஜித்திற்கு இளைஞர்கள் ரசிகர்கள் வர தொடங்கினர்.

20) எத்தனை படங்கள் வந்து வெற்றி, தோல்வி சந்தித்தாலும் அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படம் வாலி, இப்படத்தில் தான் முதல் ப்லிம்பேர் விருதை வென்றார். இதைத்தொடர்ந்து வில்லன், வரலாறு ஆகிய படங்களுக்காக இவ்விருதை இவர் வென்றுள்ளார்.

21) தீனா, இன்று தமிழகமே தல என்று கூப்பிடுவதற்கு முக்கிய காரணம், இப்படத்திற்கு பிறகு தான் அஜித்தின் ரசிகர்கள் பலம் பல மடங்கு பெரிதானது.

22) அஜித் 2001ம் ஆண்டிலிருந்து 2007 வரை 4 படங்களே தான் ஹிட்கொடுத்தார் என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால், அது தான் உண்மை.

23) வேறு எந்த ஒரு நடிகர் என்றாலும் கண்டிப்பாக பீல்ட் அவுட் தான், ஆனால், தோல்வி வந்தாலும் அஜித்தின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அவருடைய நல்ல குணங்களால் அதிகமானது.

24) அஜித் எப்போதும் தன் சம்பளத்தில் 10% நலத்திட்ட உதவிக்கு என்று ஒதுக்கி விடுவார்.

25) தன் தாய் மோகினி பெயரிலேயே ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

26) அஜித்தை வேறு லெவலுக்கு அழைத்து சென்ற படம் பில்லா, ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படம், ஓவர்சீஸில் அஜித் மார்க்கெட் உயர்ந்தது.

27) இதைத்தொடர்ந்து யாரும் நடிக்க துணியாத கதாபாத்திரம்மிரட்டும் வில்லனாக, சால்ட் & பெப்பர் லுக்கில் மங்காத்தாவில் அஜித் கலக்கியிருந்தார், எந்திரன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமா கண்டிராத ஒரு ஓப்பனிங்.

28) அஜித் இன்றும் திருப்பதி கோவிலுக்கு தன் நண்பர்களுடன் அடிக்கடி விசிட் அடித்து விடுவார்.

29) பட ரிலிஸின் போது ரசிகர்கள் கொண்டாட்டத்தை காண முன்பெல்லாம் யாருக்கும் தெரியாமல் காரில் விசிட் அடிப்பாராம்.

30) அஜித் தான் மட்டும் நன்றாக இருந்தால் கூடாது, ரசிகர்களின் நலனையும் எண்ணி ரசிகர் மன்றத்தையே கலைத்தார், ஆனால், அதன் பிறகு தான் இவரின் ரசிகர்கள் பலம் இன்னும் அதிகமானது.

31) முதலில் பெற்றோர்களை பாருங்கள், என் படம் பிடித்தால் பாருங்கள் என்று வெளிப்படையாக ரசிகர்கள் நலனுக்காக பேசியவர்.

32) தனக்கு நடனம் வராது என்பதை பல இடங்களில் கூறினாலும், தன் ஏரியாவான சண்டைக்காட்சியில் இன்றும் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து சண்டைப்போடுவார்.

33) அஜித் தன் வீட்டில் வேலைப்பார்க்கும் அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்டிக்கொடுத்துள்ளார்.

34) அஜித்துடன் அதிக படத்தில் இணைந்து பணியாற்றியவர் இயக்குனர் சரண். அமர்க்களம், காதல் மன்னன், அட்டகாசம், அசல் என 4 படங்கள்.

35) இவர் முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா, ஏ.எல்.விஜய் என இன்று தமிழ் சினிமாவை கலக்கி வரும் பலருக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தவர்.

36) அஜித் மிகவும் புகைப்படப் பிரியர், சில காலங்களாகவே கையில் கேமராவுடன் தான் வலம் வருகிறார்.

37) தல படத்திற்கு பிறகு மிகவும் பேமஸ் தல ப்ரியாணி, தன் படப்பிடிப்பில் தானே சமைத்து அனைவருக்கும் பரிமாறி அசத்துவார்.

38) அஜித் ஆஞ்சனேயா படம் வந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வருவேன் என்றார், அதை தவறாக புரிந்துக்கொண்ட பலரும் அவரை வசை பாடினர்.

39) இதை ஏன் குறிப்பிட்டுள்ளோம் என்றால், அஜித்தின் வேதாளம், முதல் நாள் ரூ 15 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்று நிரூபித்து இன்று வரை முதலிடத்தில் உள்ளது.

40) அஜித் தன் படத்தின் ப்ரோமோஷனுக்கு என்றும் வரமாட்டேன் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார், ப்ரோமோஷனால் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய முடியாது என்பதில் தெளிவாக உள்ளார்.

41) தமிழ் சினிமாவில் சிம்பு, ஜெய், பரத், பாபி சிம்ஹா, கணேஷ் வெங்கட் ராம், ரமீஸ் ராஜா, மிர்ச்சி சிவா, பிந்து மாதவி, நஸ்ரியா, அனிருத் என பல நட்சத்திரங்கள் இவருடைய ரசிகர்கள் தான்.

42) அஜித் தற்போதெல்லாம் தன் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களையே செய்யவே பெரிதும் விரும்புகிறார்.

43) அஜித் ஒரு தீவிர காபி பிரியர், இதன் காரணம் தான் சால்ட் & பெப்பர் ரகசியம்.

44) அஜித் எப்போதும் தன் பிறந்தநாளின் போது சென்னையில் இருக்கமாட்டார்.

45) தல எப்போதும் தலயாக இருக்க காரணம் அவர் கால் தரையில் இருப்பது தான், இதை யூகிசேது ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அதுபோல் என்றும் தன் மனைவிக்கு நல்ல கணவன், தன் மகள்-மகனுக்கு நல்ல அப்பா, நாட்டிற்கு நல்ல குடிமகன் என்பது மட்டுமில்லாமல் தன் ரசிகர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும் இருப்பதால் தான் இன்றும் தலையில் வைத்து தாங்குகிறது இவரை தமிழகம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply