சொறி சிரங்கு குணமாக எழுத்தாணிப் பூண்டு

Loading...

சொறி சிரங்கு குணமாக எழுத்தாணிப் பூண்டுபொதுவான குணம் எழுத்தாணிப் பூண்டு ஒரு குறுஞ்செடி. பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும், உருண்ட தண்டுகளில் (எழுத்தாணி போன்ற) நீல நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி..

எல்லா வழமான இடங்களிலும் வளரும். நஞ்சை நிலங்களில் வரப்புகளில் தானே வளர்வது. இதற்கு முத்தெருக்கன் செவி என்ற பெயரும உண்டு. மல மிளக்கும் குணமுடையது. விதைகள் மூலம் இனப்பெருக்கும் செய்கிறது. தமிழ் நாட்டில் எங்கும் காணப்படும்.

வேறுபெயர்கள். முத்தெருக்கன் செவி

ஆங்கிலப் பெயர்:- PRENANTHES SARMENTOSUS.
தாவரக்குடும்பம் -: COMPOSITAE


மருத்துவக் குணங்கள்:-

எழுத்தாணிப்பூண்டின் இலைகள் 5-10 கிராம் எடுத்து நன்கு அரைத்துச் சற்று தாராளமாக அளவாகக் காலை, மாலை கொடுத்துவரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீதபேதி குணமாகும்.

இதன் இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணைய் கலந்து பதமுறக் காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி, சிரங்கு முதலியவை குணமாகும்.

இதன் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply