சுவையான பூனா கோஸ்ட் ரெசிபி

Loading...

சுவையான பூனா கோஸ்ட் ரெசிபி
தேவையான பொருட்கள்:
மட்டன் – 600 கிராம் கடுகு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் கிராம்பு – 4-5 மிளகு – 5-6 கருப்பு ஏலக்காய் – 3-4 பச்சை ஏலக்காய் – 3-4 பிரியாணி இலை – 2 பட்டை – 1 இன்ச் வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 1 இன்ச் (துருவியது) பூண்டு – 10-12 பற்கள் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) உப்பு – தேவையான அளவு தயிர் – 1/2 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லி தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – 4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனை இறக்கி 5 நிமிடம் குளிர வைத்து, மீண்டு அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். * எண்ணெயானது சூடானதும், அதில் கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை மற்றும் பட்டை போட்டு தாளிக்க வேண்டும். * பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 10 நிமிடம் வதக்க வேண்டும். * பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, பின் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து 3-4 நிமிடம் பிரட்டி விட வேண்டும். * அடுத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். * பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் தயிர், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, எண்ணெய் தனியாக, மசாலா தனியாக வரும் வரை வதக்க வேண்டும். * இறுதியில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூனா கோஸ்ட் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply