சுவையான ஃபிங்கர் ஃபிஷ்

Loading...

சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
தேவையான பொருட்கள்
நெய் மீன் – 5 துண்டு மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் கார்ன் ப்ளார் – 3 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – ஒரு ஸ்பூன் மிளகு தூள் – அரை ஸ்பூன் சாட் மசாலா – கால் ஸ்பூன் சீரக தூள் – கால் ஸ்பூன் அரிசி மாவு – ஒரு ஸ்பூன் மைதா மாவு – ஒரு ஸ்பூன் சோயா சாஸ் – கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன் முட்டை – ஒன்று கேசரி பவுடர் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு ப்ரெட் க்ரம்ப்ஸ் – தேவையான அளவு ஆயில் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். மீன் ஆறிய பிறகு மீனில் உள்ள முட்களை எல்லாம் நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து விடவும். பிறகு உதிர்த்த அந்த மீனில் கார்ன் ப்ளார் சேர்த்து மெதுவாக பிசையவும். பின் விரல் நீளத்திற்கு சிறு சிறுத் துண்டுகளாக உருட்டி வைக்கவும். பின்னர் கார்ன் ப்ளார், மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, மிளகு தூள், சாட் மசாலா, சீரக தூள், அரிசி மாவு, மைதா மாவு, சோயா சாஸ், எலுமிச்சை சாறு, கேசரி பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கடைசியாக முட்டை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின் உருட்டிய மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply