சீரற்ற இதயத்துடிப்பால்பெண்களுக்கே அதிகளவான ஆபத்து

Loading...

சீரற்ற இதயத்துடிப்பால்பெண்களுக்கே அதிகளவான ஆபத்துஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வின்படி சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதயத் துடிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு உயிராபத்து மிக்க இதய நோய்களும், மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டு உயிராபத்து ஏற்பட இரட்டை மடங்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகின்றது.

ஆனால் பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சனை ஆண்களை விட மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறுகின்றனர்.

ஏட்ரியக் குறு நடுக்கத்தை தடுப்பதற்கான மருந்துகள் அந்தப் பெண்களுக்கு பலனளிக்காமல் போவதும் இன்னொரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விரக்தி, மனஅழுத்தம் இழப்புக்கள் போன்ற பலகாரணங்களினாலேதான் இதயத்துடிப்பு சீரற்று காணப்படுவதாக ஆய்வுகள் மேலும் குறிப்பிடுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN