சில நிமிடங்களில் இரவில் தூங்கவிடாமல் செய்யும் மூக்கடைப்பைப் போக்க சில முத்தான யோசனைகள்

Loading...

சில நிமிடங்களில் இரவில் தூங்கவிடாமல் செய்யும் மூக்கடைப்பைப் போக்க சில முத்தான யோசனைகள்தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், சிலர் இரவில் படுக்கும் போது மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும். அப்படி நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இங்கு மூக்கடைப்பை சரிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வைத்திய முறையகளானது நம் பாட்டிமார்களிடம் இருந்து சுட்டது. அதைப் படித்து இரவில் பின்பற்றி, இரவில் ஏற்படும் மூக்கடைப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.


வெங்காயம்

வெங்காயத்தை தோலுரித்து வெட்டி, அதனை 4-5 நிமிடம் முகர்ந்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபடலாம்.


ரோஜாப்பூ

மூக்கடைப்பு இருக்கும் போது, ரோஜாப்பூவின் வாசத்தை முகர்ந்து வர, உடனே மூக்கடைப்பு போய்விடும்.


மாவிலை

மாவிலைகளை காய வைத்து பொடி செய்து, நெருப்பில் போட்டு அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.


அகத்திக்கீரை

அகத்திக்கீரையை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றில் தேன் கலந்து குடித்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.


விரலி மஞ்சள்

விரலி மஞ்சளை நெருப்பில் சுட்டு, அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.


புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு

புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாற்றினை ஒன்றாக கலந்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.


இஞ்சி

வெதுவெதுப்பான நீரில் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், மூக்கடைப்பு போய்விடும்.


நொச்சி இலை

நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply