சிறுநீர் பாதையில் தொற்றா உடனே கவனியுங்க

Loading...

சிறுநீர் பாதையில் தொற்றா உடனே கவனியுங்கசிறு நீர்பாதையில் தொற்று ஏற்படுவது சாதரணமானதே. ஆனால் அதை அலட்சியமாக விட்டுவிட்டால் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். உடனே அதனை சரிபடுத்த வேண்டும்.இதற்காக மருத்துவரிடம் போக வேண்டுமென்பதில்லை.சிறு நீர் தொற்றினை எளிதில் வீட்டிலேயே குணப்படுத்தலாம்.
சிறு நீர் தொற்று எவ்வாறு உருவாகிறது?
நீர் போதிய அளவில் குடிக்காவிட்டால்,கிட்னி கிருமிகளை முழுவதும் வெளியேற்றாது. இதனால் கிருமிகள் அதன் பாதைகளிலேயே தங்கிவிடும்.சிறுநீர்ப்பாதையில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருகி அதனால் தொற்று ஏற்படுகிறது.
சுத்தமாக இல்லாவிட்டாலும்,அல்லது அமிலத்தன்மை அதிகமாக சிறு நீரகத்தில் உருவாகும்போதும் பேக்டீரியாக்கள் பெருகி தொற்று ஏற்படும்.பெண்களுக்கே அதிக அளவில் இந்த தொற்று ஏற்படும்.குறிப்பாக கர்ப்பிணிகளை பாதிக்கும்.


அதன் அறிகுறிகள்:

அடிவயிறு வலிக்கும்.அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டும் என்பது போலிருக்கும்.ஆனால் மிகச் சிறிய அளவே வெளியேறும்.அப்போது எரிச்சலும் கடுப்பும் ஏற்படும். கூடவே காய்ச்சல்,குமட்டல் ஆகியவை ஏற்படும்.


அதற்கான தீர்வுகள்:சோடா உப்பு :

ஒரு ஸ்பூன் சோடா உப்பினை ஒரு கப் நீரில் கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். சோடா உப்பு காரத்தன்மை கொண்டது. இது சிறு நீரகத்தில் உருவாகும் அமிலத்தன்மையை சமன் செய்து, எரிச்சலை குறைக்கும். பேக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுபடுத்துகிறது.


தவிர்க்க வேண்டிய உணவுவகைகள் :

அமிலம் அதிகமாக உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.ஆரஞ்சு,எலுமிச்சை, போன்ற சிட்ரஸ் வகை பழங்கள் ,உணவு வகைகள்,மது,காபி ஆகியவை அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்யும். எனவே பேக்டீரியாக்கள் பெருகி, எரிச்சலை அதிகமாக்கும்.


சீமை களாக்காய் :

இது கிருமிகளை வெளியேற்றி, மேலும் அவைகளை பெருகவிடாமல் கட்டுப்படுத்துகிறது.எனவே சீமை களாக்காயை ஜூஸாகவோ அல்லது மருந்தகங்களில் கிடைக்கும் மாத்திரை வடிவமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.


அன்னாசி :

அன்னாசி சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றுக்கு சிறந்த நிவாரணமாகும்.அதிலுள்ள புரோமெலைன் என்ற என்சைம் கிருமிகளை அழிக்கிறது.அதனை ஜூஸாகவோ அல்லது அப்படியாகவோ தினமும் எடுத்துக் கொண்டால் சிறு நீரகத் தொற்றினைக் கட்டுபடுத்தலாம்.


பியர் பெர்ரி பழங்கள் :

பியர் பெர்ரி பழங்கள் மூலிகை வகைகளைச் சேர்ந்தது. அவை சிறு நீரகத்தை முழுவதும் சுத்தப்படுத்தி, கிருமிகளை வெளியேற்றுகிறது.இது தொற்று வராமல் காக்கும் என சொல்லமுடியாது. ஆனால் இது தொற்றினைப் போக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் மிக முக்கியமான குறிப்பு சிறு நீர் தொற்று ஏற்படும் போது இரண்டு மடங்கு நீர் குடிக்க வேண்டும்.அப்போதுதான் கிட்னி கிருமிகளை வெளியேற்றும். சிறு நீர் மற்றும் அதன் பாதையில் ஏற்படும் தொற்றினிய எளிதில் குணப்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை வீட்டில் பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தை காத்திடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply