சிறுநீரக நோயை குணமாக்கும் இளநீர்

Loading...

சிறுநீரக நோயை குணமாக்கும் இளநீர்இந்தியாவில் சுமார் 122 கோடி இளநீர் உற்பத்தியாகிறது. இதில் சுமார் 56 சதவீதம் இளநீராகவும், சட்னி, சமையல் போன்ற நேரடி உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இளநீர் உடலை குளிர்ச்சியாக்குகிறது. வேர்குரு, சின்னம்மை, பெரியம்மை வியாதியை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை மாற்றுகிறது. வயிற்றுப்போக்கு, காலராவை கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட வைக்கிறது.
மஞ்சள்காமாலைக்கு சிறந்த மருந்து இளநீர். புகையிலை மற்றும் புகையால் ஏற்படும் புகைபடிமானத்தை கரைக்கிறது. கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் வராமல் பாதுகாக்கிறது. உடல் வெப்பத்தை மிதமாக வைக்கிறது. கோடை கால வியாதிகளான வயிற்றுக்கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள்காமாலை, அம்மை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகளை இளநீர் கட்டுப்படுத்துகிறது. வாரம் இரண்டு இளநீராவது நாம் குடிக்க வேண்டும்.
இளநீரில் சர்க்கரை சத்து அளவு 5.5 சதவிகிதத்திற்கு அதிகம் உள்ள தென்னையும் உள்ளது. சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புசத்து அளவு அதிகம் உள்ள இளநீரும் உள்ளது. அதனால் தான் சில இளநீர் இனிப்பாகவும், சில இளநீர் சிறிது உப்பாகவும் உள்ளது. அதற்கு மரத்தின் குணாதிசயம் என்றும், மரங்களின் செல்கள் செயல்பாட்டில் உள்ள குறைபாடாகவும் இருக்கலாம் என்கிற கருத்தும் உள்ளது. எனினும் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லா இளநீருக்கும் மருத்துவ குணம் இயற்கையாக உள்ளது. செவ்விளநீர் அளவில் அதிகம் இருப்பதால் அதிக இளநீர் நம் உடம்பிற்குள் செல்லும் போது சிறுநீரகம் சுறுசுறுப்பாக செயல்பட்டு அதிக சிறுநீர் வெளியாகும். அப்போது கல்லீரல் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். சிறுநீரகத்தில் உருவாகும் கல் கரைக்கப்பட்டு சிறுநீரக கல் உற்பத்தியாவதைத் தடுக்கும். சிறுநீரக வீக்கத்தைக் குணப்படுத்தும். மஞ்சள் காமாலை வியாதியைக் கட்டுப்படுத்தும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply